டிசம்பர் மாத ராசிபலன் - தனுசு, மகரம், கும்பம், மீனம்
தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கான டிசம்பர் மாத பலன்களை பார்ப்போம்.
தனுசு
தனுசு ராசி அன்பர்களே..
தங்கள் இரக்க குணத்தை மற்றவர்கள் அறிந்து கொண்டு உங்களை ஏமாற்றுவார்கள். ஆதலால் மற்றவர்கள் சொல்வதை அப்படியே நம்ப வேண்டாம்.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்கள், மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்து போடுவதோ, பொறுப்பு எடுத்துக் கொள்வதோ கூடாது. தேவையற்ற சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம்.
வியாபாரிகளுக்கு வெளியூர் பயணங்களை மேற்கொள்வதால் வெளிநபர்களின் தொடர்பும் அவர்களால் ஆதாயமும் உண்டாகும்.
குடும்பத் தலைவிகள், பிள்ளைகளைப்பற்றி கருத்தில் கொண்டு அவர்களுக்காக பிரார்த்தனை செய்து கொள்ள தொலைதூர ஆலயங்களுக்குச் சென்று வரும் வாய்ப்புண்டு.
கலைஞர்களுக்கு மற்ற நடிகர் நடிகைகளுடன் கிசுகிசுக்களை தடுக்க வேண்டுமென்றால் எதிர்பாலினரிடம் அதிக நெருக்கம் வேண்டாம்.
மாணவர்களுக்கு இந்த மாதம் கூடுதல் பயிற்சி அவசியம். தங்களுக்கு அதிக மதிப்பெண்களை பெற வேண்டுமானால் வீட்டில் அடிக்கடி எழுதி பார்ப்பது நல்லது.
பரிகாரம்
ராகவேந்தருக்கு வியாழக் கிழமை அன்று ரோஜா மலர் மாலையை அணிவித்து வழிபடுவது நல்லது.
மகரம்
மகர ராசி அன்பர்களே..
எண்ணம் போல் வாழ்வு என்ற வரிகளை மதிப்பவர் நீங்கள். எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும் என்பதில் நம்பிக்கைக் கொண்டவர்.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்களில் சிலருக்குப் புதிய வீடு கட்டவோ அல்லது வாங்கவோ, அதற்கான அமைப்பு உண்டாகும், விலகியிருந்த நண்பர்கள் இனி நெருங்கி வருவார்கள்.
வியாபாரிகளைப் பொருத்தவரை, ரியல் எஸ்டேட் துறையில் உள்ளவர்களுக்கு இழுபறியாக இருந்த வீட்டு மனை வாங்குவது, விற்பது தொடர்பான விசயங்கள் தங்களுக்கு சாதகமாக அமையும்.
குடும்பத் தலைவிகள் குலதெய்வ வழிபாடு மிகமிக அவசியம். தந்தை வழியில் பணம் வரும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பர். தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும்.
கலைஞர்களுக்கு தங்கள் சங்கத்தில் நீண்ட நாட்களாக கேட்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேறும். ஒரு சிலர் படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்வர்.
மாணவர்கள் விளையாட்டில் கவனம் செலுத்துவது போன்று தங்களது படிப்பிலும் கவனம் செலுத்தினால் தங்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியர் அன்பையும் பெற இயலும். நன்மதிப்பெண்களை பெறுவர்.
பரிகாரம்
கருப்பண்ண சாமிக்கு சனிக்கிழமை அன்று பொங்கலிட்டு வணங்குவது நல்லது.
கும்பம்
கும்ப ராசி அன்பர்களே..
நீங்கள் தடாலடி என்று செயலில் ஈடுபடாமல் எப்பொழுதும் நிதானமுடனும் விவேகத்துடனும் செயல்படும் சிந்தனைச் சித்தர்.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு உயர் பதவியுடன் கூடிய இடமாற்றமும் ஏற்பட வாய்ப்புண்டு. தாங்கள் கேட்ட இடத்திலேயே கிடைக்கும். தெய்வத்தின் மீது நம்பிக்கை வைப்பது நல்ல பலனை கொடுக்கும்.
வியாபாரிகளைப் பொருத்தவரை, சிலருக்கு நிலையான தொழிலும் புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பும் வரும். அந்த தொழில் தங்களுக்கு மிக உதவியாகவும் நிரந்தரமாகவும் அமையும்.
குடும்பத் தலைவிகளின் குடும்பம் பிரச்சினைகளின்றி சுமுகமாக செல்லும். தங்க நகைகளை இரவல் கொடுப்பது வாங்குவது போன்ற செயல்களை தவிர்ப்பது நல்லது.
கலைஞர்கள் படபிடிப்பின்போது மற்றவர்களிடம் அதிக நெருக்கம் வைத்துக் கொள்ள வேண்டாம். பொது விசயங்களை கலந்துரையாடல் செய்வது நல்லது.
மாணவர்கள் படிப்பில் சற்று கூடுதல் கவனம் செலுத்தினால் அன்றி அதிக மதிப்பெண்களை ஈட்டுவது அரிதாகும். சக மாணவர்களுடன் ஒற்றுமை மேலோங்கும்.
பரிகாரம்
அய்யனாருக்கு செவ்வாய் கிழமை அன்று புளிசாதத்தை படைத்து வணங்குவது நல்லது.
மீனம்
மீன ராசி அன்பர்களே..
யாராக இருந்தாலும் திறமையை மட்டும்தான் உற்றுநோக்குபவர். பகட்டிற்கு முக்கியத்துவம் தராதவர் நீங்கள்.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு வெளியூர் செல்லுதல் மற்றும் அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளுதல் போன்றவையால் உடல் நலம் கெடும். உடல் நலத்தில் கவனம் தேவை.
வியாபாரிகளைப் பொருத்தவரை எங்கு பேசினாலும் நிதானமாகவும் யோசித்தும் பேசுவது சிறந்தது. ங
வீண் பேச்சுகளால் பிரச்சினைகள் உருவாகலாம். மற்றபடி தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் மாதம் இது.
குடும்பத் தலைவிகளுக்கு பிள்ளைகளால் நற்பெயரும் கவுரவமும் அதிகமாகும். உடல் நிலையில் அவ்வப்போது சிறுசிறு தொந்தரவுகள் ஏற்பட்டு பின் சரியாகும்.
கலைஞர்களுக்கு நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுடன் நல்ல சம்பளமும் கிடைக்கும் மாதமாக அமையும். வீட்டிலும் வெளியிலும் மதிப்பு கூடும்.
மாணவர்கள் எதிர்ப்பார்த்த பாடப்பிரிவில் அதிக மதிப்பெண் பெற வேண்டுமானால் பல முறை எழுதி பார்ப்பது நல்லது.
பரிகாரம்
மகாலஷ்மிக்கு மல்லிகை மலர் மாலையை வெள்ளிக் கிழமை அன்று சாத்தி வணங்குவது நல்லது.
கணித்தவர்:
திருமதி. N.ஞானரதம்
Cell 9381090389