டிசம்பர் மாத ராசிபலன் - சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்
சிம்மம், கன்னி, துலாம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்களுக்கான டிசம்பர் மாத பலன்களை பார்ப்போம்.;
சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களே..
தன்னை மதித்துக் கேட்டால் தனக்கு தெரியா விட்டாலும் அதற்காக அலைந்து திரிந்தாவது தெரிந்து கொண்டு சந்தேகத்தினை போக்கும் பொறுமைசாலி நீங்கள்.
சிறப்புப் பலன்கள்
உத்யோகஸ்தர்ளில் ஒரு சிலருக்கு நீண்ட காலமாக முயற்சித்த இடமாற்றக் கோரிக்கைகள் விரைவில் நடந்தேறும். கவலை வேண்டாம் அலுவலக இடமாற்றம் உண்டாகும்.
வெளிநாட்டு வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்ளுக்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்ய அதிகமான ஆர்டர்கள் கிடைக்கும். அதனை குறித்த நேரத்தில் தாங்கள் அனுப்பி வைத்துவிடுவீர்கள்.
குடும்ப தலைவிகளில் சிலருக்கு கணவனுடன் ஏற்பட்ட பிணக்குகள் தீர்ந்து சந்தோஷமான சூழ்நிலை உண்டாகும். அன்பு பெருகும்.
கலைஞர்கள் தாங்கள் நினைத்தமாதிரியான கதாபாத்திரம் கிடைத்து தங்களுக்கு மனதில் உற்சாகத்துடன் காணப்படும் மாதமாகும். பணவரவுக்கும் குறையில்லை.
மாணவர்கள் கல்வியில் ஆர்வமில்லாமல் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நேரத்தை வீணடிப்பதை தவிர்த்தால் அதிக மதிப்பெண்களை பெறலாம்.
பரிகாரம்
ஞாயிற்றுகிழமை அன்று லிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்து தரிசிப்பது நல்லது.
கன்னி
கன்னி ராசி அன்பர்களே..
உங்களுக்கு எடுத்தெறிந்து பேசப் பிடிக்காது. யாரையும் கஷ்டப்படுத்தாமல் நாசூக்காக பழகும் இயல்புடையவர் நீங்கள்தான்.
சிறப்புப் பலன்கள்
உத்யோகஸ்தர்களைப்பொருத்தவரை உங்களின் திறமையை மேலதிகாரிகள் கண்டுபிடித்து உங்களை மேல்நிலைக்கு கொண்டு செல்ல முற்படுவர். ஆதலால், அதற்கு குறுக்கே நிற்காமல் அவர்களின் சொல்படி நடக்கப்பாருங்கள்.
வியாபாரிகள் வழக்கமாக செய்யும் வியாபாரத்தைத் தாண்டி மற்ற வேற்றுப் பொருட்களையும் சந்தைக்கு கொண்டுவந்து விற்பனை செய்வர். அதுவும் லாபத்தை தரும்.
குடும்பத்தலைவிகள் எவ்வளவு பணம் வந்தாலும் அதை சேமிக்க முடியாது என்ற நிலை மாறி அதிகளவு பணப்புழக்கம் ஏற்படும். நீண்ட கால வைப்புத் தொகையாக வங்கியில் டெபாசிட் செய்வீர்கள்.
வீணை வாசிப்பவர்கள், புல்லாங்குழல் மற்றும் மற்ற இசைக்கருவிகள் இயக்குபவர்கள் போன்ற கலைஞர்களுக்கு கச்சேரி புக்கிங் ஆகும். திரைபடத்துறையில் இருக்கும் கேமராமேன் போன்றவர்களுக்கும் ஒப்பந்தமாகுமாகும் மாதமாகும்.
மாணவர்கள் தங்களின் எண்ணம் ஈடேற வேண்டுமென்றால், அதிகமாக, பேசுவதை நிறுத்திவிட்டு நன்கு படிப்பதும் மற்றும் எழுதிபார்ப்பதும் தங்களை உயர் இடத்தில் நிறுத்த இயலும்.
பரிகாரம்
காமாட்சி அம்மனுக்கு வெள்ளிக் கிழமை அன்று எலுமிச்சம் பழ மாலையை தரிவிப்பது நல்லது.
துலாம்
துலாம் ராசி அன்பர்களே..
யார் யாரை எவ்விதத்தில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதை அறிந்தவர் நீங்கள்.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வோ இடமாற்றமோ கிடைப்பது சற்று தாமதப்படும். வேலை இல்லாதவர்களுக்கு தங்கள் கடின முயற்சியால் விரும்யிய வண்ணம் வேலை கிடைக்கும்.
வியாபாரிகள் தாங்கள் செய்யும் வியாபாரத்தை விரிவுபடுத்த விளம்பர பலகைகளை ஆங்காங்கே வைக்க திட்டமிடுவீர்கள். மேலும், நாளிதழ்களில் விளம்பரப்படுத்துவீர்கள்.
குடும்பத் தலைவிகள் குடும்பத்தில் அன்னியர்களின் தலையீடு உண்டாகும். அவற்றை பொருட்படுத்தாமல் இருக்க வேண்டும். தாயாரின் உடல்நிலையில் பிற்போக்கான நிலை உண்டாகும். கவனம் அவசியம்.
கலைஞர்கள் சிறு சிறு குறும் படங்களில் வாய்ப்புகளை பயன்படுத்துவது நல்லது. பின்பு உங்கள் நடிப்புக்கு இது பேருதவியாக இருக்கும்.
மாணவர்கள் காதலில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. எதிர்பாலினரிடத்தில் சற்று கவனமுடன் பழகுவது நல்லது.
பரிகாரம்
லட்சுமி நரசிம்மருக்கு புதன் கிழமை அன்று துளசி மாலை அணிவித்து வணங்குவது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களே..
செய்ய வேண்டிய பணிகளை யாரும் குறை சொல்ல முடியாத அளவிற்கு கச்சிதமான செய்து முடிப்பீர்கள்
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்கள் தங்கள் மேலதிகாரிகளின் தலைமையில் இருப்பவர்களின் சொந்த விஷயங்களில் தலையிடும் அளவிற்கு நெருக்கமாவீர்கள். நல்ல சம்பளமும் கிடைக்கும்.
வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த புதிய புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விற்பனையை கூட்ட முயல்வர். அது தங்களுக்கு பலிக்கும்.
குடும்பத் தலைவிகள் தங்களின் கணவர் வழி உறவு முறைகளால் சிறிது நன்மையை எதிர்பார்க்கலாம். உடல் நிலை மிகவும் சோர்வாகவும் மந்தமாகவும் இருக்கும். சுறுசுறுப்பு அவசியம்.
கலைஞர்கள் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. நடிகர்கள் தங்கள் இயக்குனரிடம் வாக்குவாதம் செய்யாமல் அவர்கள் யோசனையை ஏற்று நடித்தால் தங்களுக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் கிடைக்கும்.
மாணவர்கள் நீண்ட நேரம் செல்போன்களை பயன்படுத்துவது, இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பதை தவிர்ப்பது நல்லது. அதிகாலையில் எழுந்து படித்தால் நன்கு மனதில் பதியும்.
பரிகாரம்
சுப்பிரமணியருக்கு செவ்வாய் கிழமை அன்று ரோஜா மலர் மாலை அணிவித்து வழிபடுவது நல்லது.
கணித்தவர்:
திருமதி. N.ஞானரதம்
Cell 9381090389