திருப்பதி: கல்யாண வெங்கடேச பெருமாள் கோவிலில் பவித்ரோற்சவம்

பவித்ரோற்சவ விழாவை முன்னிட்டு 30-ம் தேதி வரை பல்வேறு ஆர்ஜித சேலைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

Update: 2024-10-28 13:07 GMT

திருப்பதி

திருப்பதி அருகே உள்ள சீனிவாச மங்காபுரம் கல்யாண வெங்கடேச பெருமாள் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவ விழா இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று உற்சவ தெய்வங்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடைபெற்றது.

பவித்ரோற்சவ வழிபாடுகளில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் 500 ரூபாய் கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற வேண்டும். ஒரு டிக்கெட்டுக்கு இரண்டு நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

பவித்ரோற்சவ விழா துவக்க நாள் நிகழ்வுகளில் தேவஸ்தான அதிகாரிகள் வரலட்சுமி, கோபிநாத் மற்றும் கோவில் ஊழியர்கள் பங்கேற்றனர்.

பவித்ரோற்சவ விழாவை முன்னிட்டு 30-ம் தேதி வரை பல்வேறு ஆர்ஜித சேலைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்