கார்த்திகை பிரம்மோற்சவம்: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு டிசம்பர் 8-ம் தேதி வரை அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Update: 2024-11-26 09:42 GMT

திருச்சானூர்:

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவம் நாளை மறுநாள் (28-11-2024) தொடங்கி டிசம்பர் 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு கோவிலை சுத்தம் செய்யும் பாரம்பரிய நிகழ்வான ஆழ்வார் திருமஞ்சனம் இன்று நடைபெற்றது. அதிகாலையில் சுப்ரபாதம், சஹஸ்ர நாமார்ச்சனையைத் தொடர்ந்து காலை 6 மணி முதல் 9 மணி வரை கோவில் சுத்தம் செய்யும் பணி நடந்தது.

கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் உள்ளிட்டவை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யப்பட்டன. பின்னர் பல்வேறு வாசனை திரவியங்கள் கலந்த புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது. ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றதால், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை ரத்து செய்யப்பட்டது.

பிரம்மோற்சவ விழாவிற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. விழாவை முன்னிட்டு டிசம்பர் 8-ம் தேதி வரை அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்