தீய சக்திகளை விலக்கி லட்சுமி கடாட்சம் அருளும் தீப வழிபாடு

கார்த்திகை மாதம் முழுவதும் அல்லது திருக்கார்த்திகை தினம் அன்று விளக்கு ஏற்றி வழிபடுவது மிகவும் விஷேசமாகும்.

Update: 2024-10-24 08:14 GMT

தீப வழிபாடு, நம் கலாசாரத்துடன் கலந்த ஒன்று. நாம் வசிக்கும் வீட்டில் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் தீபம் ஏற்றிவைத்து, அந்த தீபத்தை வழிபாடு செய்தால், தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்று ஞான நூல்கள் சொல்கின்றன.

தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதி தேவியும் எழுந்தருள்வதாக ஐதீகம். எனவே, தீபம் ஏற்றி வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம்.

வீட்டில் தீபம் ஏற்றி வைத்து வழிபடுவதால் சுபம், ஆரோக்கியம், நன்மை, தனவரவு அதிகரித்தல், நல்லபுத்தி ஆகியவை பெருகும்.

தீபங்களுக்கு என்று ஒரு வழிபாடு பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது தமிழ் மாதத்தில் தீபத்தை சிறப்பிக்கும் மாதம், கார்த்திகை. இந்த கார்த்திகை மாதம் முழுவதும் அல்லது திருக்கார்த்திகை தினம் அன்று, இல்லத்தில் குத்து விளக்கேற்றியும், அகல் விளக்கு ஏற்றியும் வழிபடுவது மிகவும் விஷேசமாகும்.

Tags:    

மேலும் செய்திகள்