சென்னை புனித யூதா ததேயு திருத்தல தேர்பவனி

சென்னை வாணுவம்பேட்டையில் உள்ள புனித யூதா ததேயு திருத்தலதின் 47-வது ஆண்டு விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2024-10-27 19:03 GMT

சென்னை,

இயேசுவின் 12 சீடர்களில் முக்கியமானவராக கருதப்பட்டவர், இயேசுவின் உருவ ஒற்றுமை கொண்டவரான புனித யூதா ததேயு. இவருக்கு சென்னை ஆதம்பாக்கத்தை அடுத்த வாணுவம்பேட்டையில் தனி திருத்தலம் அமைந்துள்ளது. அனைத்து வேண்டுதல்களும் இங்கே நிறைவேறுவதால், எல்லா மதத்தினரும் இந்த திருத்தலத்தை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.

பிரசித்தி பெற்ற யூதா ததேயு திருத்தலத்தின் 47-வது ஆண்டு விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அன்றைய தினம் மாலை கொடியேற்ற திருவிழாவும், அதனைத் தொடர்ந்து ஆடம்பர கூட்டு திருப்பலியும் நடந்தது.

நேற்று சென்னை பல்கலைக்கழக பேராசிரியரும், பங்கு தந்தையுமான ஜேம்ஸ் பொன்னையா தலைமையில் பங்கு குடும்பப் பெருவிழா நடைபெற்றது. மாலை 6 மணிக்கு ஜெபமாலை மற்றும் புனிதரின் நவநாள் ஜெபமும், அதனைத் தொடர்ந்து ஆடம்பர திருப்பலி மற்றும் திருத்தேர் மந்திரிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இன்று திருக்கொடி இறக்கம் மற்றும் நன்றி பெருவிழா நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு ஜெப மாலை மற்றும் புனிதரின் நவநாள் ஜெபம், இரவு 7 மணிக்கு நன்றி ஆராதனையும், அதனைத் தொடர்ந்து ஆடம்பர திருப்பலியும் நடைபெறுகிறது. இதில் அருட்தந்தைகள் ரவி ஜோசப், விக்டர் வினோத், பிரான்சிஸ் கிளாட்வின் உள்ளிட்டர் கலந்து கொள்கிறார்கள்.

 

Tags:    

மேலும் செய்திகள்