இயற்கை ஏர் பிரஷ்னர்கள்

நறுமணப் பையை அலமாரி, படுக்கை அறை, சமையல் அறை ஆகியவற்றில் வைத்துப் பயன்படுத்தலாம். இது காற்றில் நறுமணத்தைப் பரவச் செய்வதோடு ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.;

Update: 2023-03-19 01:30 GMT

றைகளில் படர்ந்திருக்கும் விரும்பத்தகாத வாசனைகளை போக்குவதற்காக ஏர் பிரஷ்னர்களை பயன்படுத்துகிறோம். இவை காற்றில் கலந்து நறுமணத்தை வெளியிடுகின்றன.

இயற்கை மூலப்பொருட்கள் கொண்டு வீட்டிலேயே 'ஏர் பிரஷ்னர்' தயாரிக்க முடியும். அவற்றை அலங்காரப் பொருட்களாகவும் பயன்படுத்தலாம். அதைப் பற்றி இங்கே பார்ப்போம்.

நறுமணப் பைகள்:

நறுமணப் பைகள் தயாரிப்பதற்கு கைத்தறி, பட்டு, பர்லாப் போன்ற துணி ரகங்களை உபயோகிக்கலாம். 10X8 அல்லது 12X13 சென்டிமீட்டர் நீள, அகலம் கொண்ட பை தயாரித்து, அதன் மீது அழகான மணிகள், ரிப்பன்கள் அல்லது ஜரிகை கொண்டு உங்களுக்குப் பிடித்த டிசைன்களை வரைந்து அலங்கரிக்கவும்.

பின்னர் உலரவைத்த சிட்ரஸ் பழங்களின் மேல் தோல், உலர்ந்த நறுமணமுள்ள மூலிகைகள் மற்றும் பூக்கள் கொண்டு அந்தப் பையை நிரப்ப வேண்டும். இதற்கு உலர்ந்த துளசி, புதினா இலைகள், ரோஜா இதழ்கள், கிராம்பு, லவங்கப்பட்டை, ரோஸ்மேரி, லாவெண்டர், கெமோமில், வயலட் இதழ்கள், திராட்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றின் உலர்ந்த தோல்களைப் பயன்படுத்தலாம். அவற்றை நிரப்பியவுடன் பையை மூடி, அதன் வாய்ப்பகுதியை தைக்க வேண்டும். இந்த நறுமணப் பையை அலமாரி, படுக்கை அறை, சமையல் அறை ஆகியவற்றில் வைத்துப் பயன்படுத்தலாம். இது காற்றில் நறுமணத்தைப் பரவச் செய்வதோடு ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

நறுமணத் தொட்டி:

200 மில்லி லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி அல்லது பாத்திரத்தில் முக்கால் பங்கு அளவுக்கு தண்ணீர் நிரப்பவும். அதில் எலுமிச்சை எண்ணெய் 15 சொட்டுகள், ரோஸ்மேரி எண்ணெய் 5 சொட்டுகள் மற்றும் வெண்ணிலா எசன்ஸ் 5 சொட்டுகள் ஊற்றுங்கள். பின்பு அந்த தொட்டியை அழகான மலர்களைக் கொண்டு அலங்கரியுங்கள். இதனை வீட்டின் வாசல் பகுதியில் வைக்கலாம்.

ஆரஞ்சு பிரஷ்னர்:

ஆரஞ்சு பழத் தோலை நன்றாக உலர வைக்கவும். அதனுடன் லவங்கப்பட்டை, கிராம்பு ஆகியவற்றை போட்டு ஆரஞ்சு எசன்ஷியல் எண்ணெய் சில துளிகள் ஊற்றவும். இவ்வாறு சிட்ரஸ் பழங்களின் தோல்கள் கொண்டு தயாரிக்கப்படும் ஏர் பிரஷ்னர்களை சமையல் அறையில் வைக்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்