போட்டோ கிப்ட் பாக்ஸ்
அழகான போட்டோ கிப்ட் பாக்ஸ் தயாரிப்பு குறித்து தெரிந்து கொள்வோம்.
போட்டோ கிப்ட் பாக்ஸ்
தேவையான பொருட்கள்:
சிறிய அட்டைப் பெட்டி | கார்ட்போர்டு அட்டை | வண்ண காகிதத்தாள் | பசை உல்லன் நூல் | புகைப்படங்கள் | அலங்கார ஸ்டிக்கர்கள் | அலங்கார பூக்கள் | பச்சை நிற குவில்லிங் பேப்பர்
செய்முறை:
♦ சிறிய அட்டைப்பெட்டி ஒன்று எடுத்துக் கொள்ளுங்கள்.
♦ வண்ண காகிதத்தாளை அட்டைப் பெட்டியின் உள்பக்கமும், வெளிப்பக்கமும் ஒட்டுங்கள். பின்பு அதை நன்றாக உலர வையுங்கள்.
♦ அட்டைப்பெட்டிக்கு மூடி தயாரிப்பதற்காக, ஒரு கார்ட்போர்டு அட்டையை நீளவாக்கில் வெட்டி அதன் மேல் வண்ண காகிதத்தாளை ஒட்டுங்கள். அது நன்றாக உலர்ந்ததும், அதை படத்தில் காட்டியவாறு மூடிக்கு தேவையான அளவில் சதுரமாக மடித்து ஒட்டுங்கள்.
♦ படத்தில் காட்டியுள்ளபடி இந்த சதுர வடிவ அட்டையை மற்றொரு காகிதத்தில் வைத்து, பெட்டிக்கு பொருந்துமாறு மூடி ஒன்றை தயார் செய்யுங்கள்.
♦ இப்போது அட்டைப்பெட்டியின் மீது அலங்கார ஸ்டிக்கர்களை ஒட்டி அலங்கரியுங்கள்.
♦ அட்டைப்பெட்டியின் அகலத்தை விட, சற்றே குறைவான அகலம் கொண்ட நீளமான வண்ண காகிதத்தாளை எடுத்துக்கொள்ளுங்கள். உங்களிடம் இருக்கும் புகைப்படங்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு வண்ண காகிதத்தாளின் நீளம் இருக்க வேண்டும்.
♦ புகைப்படங்களின் அளவுக்கேற்றவாறு படத்தில் காட்டியுள்ளபடி வண்ண காகிதத்தாளை மடித்துக்கொள்ளுங்கள்
♦ வண்ண காகிதத்தாளின் ஒவ்வொரு மடிப்பிலும் புகைப்படங்களை ஒட்டுங்கள். சில மடிப்புகளில் வாழ்த்துகளையும் எழுதலாம்.
♦ பச்சை நிற குவில்லிங் தாளை சுருட்டி சிறு சிறு இலைகள் வடிவில் செய்து கொள்ளுங்கள்.
♦ அந்த இலைகளை அலங்கார பூக்களுடன் சேர்த்து, புகைப்படங்கள் ஒட்டியிருக்கும் வண்ண காகிதத்தாளில் ஆங்காங்கே ஒட்டி அலங்கரியுங்கள்.
♦ பின்னர் அவற்றை நன்றாக உலர வையுங்கள்.
♦ இப்போது புகைப்படம் ஒட்டியிருக்கும் வண்ண காகிதத்தாளின் அடிப்பகுதியை பெட்டியின் உள்பகுதியோடும், மேல்பகுதியை மூடியின் உள்பகுதியோடும் இணைத்து ஒட்டுங்கள்.
♦ அட்டைப்பெட்டி மூடியின் உள்பகுதியில் படத்தில் காட்டியுள்ளவாறு நூல் கொண்டு கைப்பிடி போல ஒட்டுங்கள்.
♦ இப்போது அழகான 'போட்டோ கிப்ட் பாக்ஸ்' தயார்.