உங்களுக்கான பணியை தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டியவை

பிடித்த தொழிலாக இருந்தாலும், அது பொருளாதார ரீதியாக உங்கள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்க வேண்டும்.

Update: 2022-05-23 05:30 GMT

டித்து முடித்ததும், வேலைக்குச் செல்ல வேண்டும், சுயதொழில் செய்து தொழில் முனைவோர் ஆக வேண்டும் என ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஆசைகள் உண்டு. இவ்வாறு தேர்ந்தெடுக்கும் பணிகள், தங்களுக்கு ஏற்றவையாக இருந்தால் மட்டுமே அதில் முழுமையாக வெற்றி அடைய முடியும்.

ஒரு தொழிலை அல்லது வேலையைத் தேர்ந்தெடுக்கும்போது, எவற்றையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும்? என்பதற்கான வழிகாட்டி இதோ...

ஆர்வங்கள், விருப்பங்களைப் பட்டியலிடுங்கள்

ஒரு வேலையை அல்லது தொழிலைத் தேர்ந்தெடுக்கும்போது, கருத்தில் கொள்ள வேண்டிய முதல் விஷயம், உங்கள் ஆர்வங்கள் மற்றும் விருப்பங்களைப் பட்டியலிடுவதுதான். இதன் மூலம் உங்

களுக்கான துறையை எளிதாக தேர்வு செய்யலாம். நீங்கள் மற்றவர்களை ஊக்குவித்து வளர்ப்பதில் ஆர்வமாக இருந்தால், சமூகப் பணி அல்லது ஆசிரியர் தொழிலைக் கருத்தில் கொள்ளலாம். பயணம்

மற்றும் சாகசத்தில் விருப்பம் இருந்தால் சுற்றுலா, விமானப் பணியைத் தேர்வு செய்யலாம்.

நீங்கள் சிக்கலான விஷயங்களைத் தீர்க்கும் ஆர்வமுள்ளவர் எனில் பொறியியல் மற்றும் ஆய்வுத்துறைகளைத் தேர்வு செய்யலாம். உங்கள் இலக்குகள் என்னவாக இருந்தாலும், உங்களுக்கு ஏற்ற ஒரு தொழில் இருக்கிறது.

வருமானம்

பிடித்த தொழிலாக இருந்தாலும், அது பொருளாதார ரீதியாக உங்கள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்க வேண்டும்.

உதாரணமாக, உங்களுக்கு ஆசிரியராக விருப்பம் இருந்தால், தனியார் பள்ளி ஆசிரியர், அரசுப் பள்ளி ஆசிரியர், தொடக்கப்பள்ளி ஆசிரியர், மேல்நிலைப்பள்ளி ஆசிரியர், கல்லூரிப் பேராசிரியர் எனப் பல படிநிலைகளில் கிடைக்கும் ஊதியத்தை ஒப்பிட்டுப் பார்த்து முடிவு செய்யலாம்.

கல்வித் தேவைகள்

உங்களுக்கு விருப்பமான வேலைக்கேற்ற கல்வித்தகுதி என்ன என்பதையும் ஆராய வேண்டும். ஒரு சில பணிகளுக்கு குறைந்த காலப் பயிற்சிகள் மட்டுமே போதுமானது. சிலவற்றுக்கு ஆண்டுக்கணக்கில் படிக்கவும், செலவிடவும் வேண்டியிருக்கும்.

வேலை மற்றும் வாழ்க்கை சமநிலை

வழக்கறிஞர்கள், நிதி ஆய்வாளர்கள் மற்றும் மருத்துவர்கள் வேலை நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும். இந்தத் துறைகளைத் தேர்ந்தெடுத்தால், இது போன்ற தியாகத்தை செய்ய நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.

பயணத் தேவைகள்

சில வேலைகளில் ஈடுபடும்போது, அதிகமாக பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை முறை, லட்சியங்கள் மற்றும் விருப்பங்களுடன் எந்த வகையான தொழில் பொருந்தும் என்பதைக் கண்டறியுங்கள். நீங்கள் பயணிப்பதில் விருப்பம் உள்ளவர் என்றால், அடிக்கடி பயணம் செய்யும் தொழில் உங்களுக்கு பொருத்தமானதாக இருக்கலாம்.

வளர்ச்சிக்கான வாய்ப்புகள்

ஒரு வேலை அல்லது தொழிலைத் தேர்ந்தெடுக்கும்போது, அதில் வளர்ச்சிக்கான வாய்ப்பு எவ்வாறு உள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். காலப்போக்கில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொழிலில் முன்னேற முடியுமா அல்லது சில ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் பின்தங்கிப் போய்விடுவீர்களா? என்பதை ஆராய வேண்டும். 

Tags:    

மேலும் செய்திகள்