2 தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை பெற அரசாணை

Update: 2023-03-15 16:38 GMT


தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 2021-22-ம் ஆண்டுக்கு தேர்வு செய்யப்பட்ட திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 2 அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கான அரசாணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த திட்டத்தின் கீழ் உடுமலையை சேர்ந்த நெல்சன், திருப்பூர் இடுவம்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.3,500, மருத்துவப்படி ரூ.500 என ரூ.4 ஆயிரம் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படுகிறது. அதற்கான அரசாணையை கலெக்டர் வினீத், அகவை முதிர்ந்த தமிழறிஞர்களான நெல்சன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடம் வழங்கினார். மேலும் பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட வளர்ச்சி துணை இயக்குனர் (கூடுதல் பொறுப்பு) இளங்கோ உடனிருந்தார்.

மேலும் செய்திகள்