அப்பா-மகள் உறவை மேம்படுத்தும் வழிகள்

நீங்களே தீர்வைக் கண்டுபிடிக்க முடிந்தால் சிறந்தது. ஏதேனும், சிக்கல்கள் இருப்பது தெரிந்தால், அதற்கு தகுந்த ஆலோசனை பெறுவது அவசியம். மனதை பாதிக்கும் விஷயமாக இருந்தால், உளவியல் நிபுணரின் ஆலோசனையைப் பெறலாம்.;

Update:2022-12-25 07:00 IST

ந்தைக்கும், மகளுக்குமான உறவு அற்புதமானது. மகளுக்கு தந்தை நல்ல தோழனாகவும், மகள் தந்தைக்கு மற்றொரு தாயாகவும் மாறும் மாயம் இங்கே நிகழும். சில நேரங்களில் இருவருக்குள்ளும் தோன்றும் கருத்துவேறுபாடுகள், உறவின் இணைப்பு சங்கிலியில் இடைவெளியை ஏற்படுத்தலாம். அதை கவனமாகக் கையாண்டு நீக்கினால் அன்பின் ஆழம் அதிகரிக்கும். அதற்கான சில ஆலோசனைகள்…

மகளுக்கும், தந்தைக்கும் இடையில் உருவாகும் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாவை மட்டும் குறை சொல்ல முடியாது. அக்கறையோடு அவர் செய்யும் செயல்கள் நமது பார்வையில் தவறாகத் தோன்றலாம். எனவே, நிதானத்தோடு சிந்தித்து, பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிக்க வேண்டும்.

நீங்களே தீர்வைக் கண்டுபிடிக்க முடிந்தால் சிறந்தது. ஏதேனும், சிக்கல்கள் இருப்பது தெரிந்தால், அதற்கு தகுந்த ஆலோசனை பெறுவது அவசியம். மனதை பாதிக்கும் விஷயமாக இருந்தால், உளவியல் நிபுணரின் ஆலோசனையைப் பெறலாம்.

அப்பா மீதான உங்கள் பார்வையும், கணிப்பும் வேறாக இருக்கலாம். ஒரு வேளை அவர், உங்களின் ஒவ்வொரு செயலையும் விமர்சிப்பவராக இருக்கலாம். அது உங்களுக்குத் தவறாகத் தெரிந்தாலும், தந்தையின் கண்ணோட்டத்தில் இந்த விமர்சனம் நம்மைச் சிறந்த நிலைக்கு உயர்த்துவதற்கான ஒரு முயற்சியே. எனவே, தந்தையின் கண்ணோட்டத்தில் இருந்து எதையும் அணுகுவது நல்லது.

ஒரு சில காரணங்களால் கருத்து வேறுபாடு உண்டானாலும், ஒருவர் மற்றவருடன் பேசாமல் இருக்கக் கூடாது. மனம் விட்டுப்பேசி இணைந்திருப்பதே நல்லது. இதற்கு குடும்பத்தினரின் உதவியை நாடலாம்.

தந்தையுடன் நடக்கும் உரையாடல் வாக்குவாதமாக மாறாதிருக்க அமைதியாகவும், பொறுமையாகவும் இருப்பது அவசியம். மனதில் தோன்றும் கருத்தை வெளிப்படையாகவும், அமைதியாகவும் சொல்லுங்கள். தவறுகளை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் எதிர்பார்ப்புகள் பற்றி அவரிடம் தெரிவித்து, அவர் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதையும் வெளிப்படுத்துங்கள்.

ஒரு நாளில் சில மணி நேரங்களாவது தந்தையுடன் செலவழியுங்கள். அவரது வார்த்தைகளை காது கொடுத்து கேளுங்கள். அவரது அனுபவங்கள், அவர் கடந்து வந்த பாதைகள், சந்தித்த சவால்கள் போன்றவை உங்களுக்கு பாடமாக அமையும்.

இருவருக்கும் இடையே தெளிவான எல்லைகளை அமைத்துக் கொள்ளுங்கள். அவரை மதியுங்கள். நீங்கள் பகிர்ந்து கொண்ட நல்ல நேரங்களை நினைவு கூருங்கள். தந்தையர் தினம், பிறந்தநாள் மற்றும் சில மகிழ்ச்சியான தருணங்களை ஒன்றாகக் கொண்டாட முயற்சி செய்யுங்கள். இவை தந்தையுடனான உறவில் நெருக்கத்தை ஏற்படுத்தும்.

Tags:    

மேலும் செய்திகள்