குழந்தையை எளிதாக தூங்க வைக்கும் ஆலோசனைகள்

நிம்மதியான தூக்கம் வர வேண்டுமானால், அமைதியான சூழல் அவசியம். குழந்தைகளுக்கு இதுபோன்ற சூழலை ஏற்படுத்தித் தர வேண்டியது பெற்றோரின் கடமை. குழந்தை உறங்கும் அறையை இனிமையாகவும், அமைதியாகவும் வைத்திருக்க வேண்டும்.;

Update:2022-09-04 07:00 IST

குழந்தைகள் இரவில் சரியாகத் தூங்காமல் அடம்பிடிக்கும்போது, அம்மாக்களின் நிலைமை திண்டாட்டம் ஆகிவிடும். ஆரோக்கியமான தூங்கும் வழக் கத்தை குழந்தைகளுக்கு பழக்குவது பெற்றோரின் கடமை. குழந்தைகள் அடம்பிடிக்காமல் எளிதாகத் தூங்கச் செய்வதற்கு சில டிப்ஸ்:

நேரத்தைக் கடைப்பிடியுங்கள்:

சீரான படுக்கை நேர வழக்கத்தைப் பின்பற்றுவது, குழந்தை எவ்வித இடையூறும் இன்றி தூங்க உதவி செய்யும். தூங்கும் நேரத்தில் குழந்தை ஏதாவது செய்து கொண்டிருந்தால், அதற்கு அனுமதிக்காமல் கண்டிப்புடன் இருக்க வேண்டும். சரியான நேரத்தில் குழந்தை தூங்கச் செல்லும் வழக்கத்தை இது ஏற்படுத்தித் தரும்.

அமைதியான சூழல்:

நிம்மதியான தூக்கம் வர வேண்டுமானால், அமைதியான சூழல் அவசியம். குழந்தைகளுக்கு இதுபோன்ற சூழலை ஏற்படுத்தித் தர வேண்டியது பெற்றோரின் கடமை. குழந்தை உறங்கும் அறையை இனிமையாகவும், அமைதியாகவும் வைத்திருக்க வேண்டும். அறையில் மிகவும் குறைவான வெளிச்சத்தை உணர்வதற்கு, ஜன்னல் திரையை சரியாக அமைக்க வேண்டும். வெளியில் இருந்து சத்தங்கள் அறைக்குள் எட்டாமல் இருக்குமாறு கவனித்துக்கொள்ள வேண்டும். விளக்கு வெளிச்சம் அதிகமாக இல்லாமல், மங்கலான இரவு ஒளியைப் பயன்படுத்தலாம். படுக்கையில் குழந்தையுடன் பேசும்போது, மென்மையான குரலைப் பயன்படுத்தலாம். இது இரவை உணர வைப்பதற்கான அறிகுறி.

வயிற்றை நிரப்புங்கள்:

குழந்தைகளுக்குப் பசியை சரியாகச் சொல்லத் தெரியாது. இரவு நேரத்தில், சரியாக சாப்பிடாமல் பசி உணர்வுடன் இருந்தால், தூக்கம் வராமல் அழும். எனவே, இரவில் குழந்தைகள் வயிறு நிறைய சாப்பிடுகிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். சாப்பிட்ட உடனே தூங்க வைக்காமல், சிறிது நேரம் ஏதாவது ஒரு செயல்பாட்டில் ஈடுபடுத்தலாம். இரவில், தளர்வான உடை அணிவித்தல், தாலாட்டு, தாயின் அருகாமை ஆகியவை குழந்தைக்கு தூக்கம் வரச் செய்யும்.

குழந்தை தூங்கும் முன் கதை சொல்வது, மெல்லிசையை ரசிப்பது ஆகியவை உறக்கத்திற்கு உறுதுணையாக இருக்கும்.

குழந்தையை அடிக்காதீர்கள்:

குழந்தைகள் உறங்கவில்லை என்றால், அதற்காக அடிப்பது, பயப்படும் அளவு மிரட்டுவது போன்ற முறைகளைக் கையாளக்கூடாது. இவ்வகையான பழக்கங்கள் குழந்தைக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இவை குழந்தையின் கற்றல் மற்றும் அறிவு வளர்ச்சியில் பாதிப்பை உண்டாக்கும். பகல் உணவில் சத்து நிறைந்த காய்கறி, கீரைகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்க்க வேண்டும். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

பொதுவான டிப்ஸ்:

இரவில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும்போது, அறையில் விளக்கை அணைத்து அல்லது சிறிய விளக்கை மட்டும் ஒளிர விடலாம். குழந்தைகளின் தூங்கும் இடத்தை அடிக்கடி மாற்றக்கூடாது. லேசாக குழந்தையை ஆட்டி தாலாட்டு பாடலாம். மெதுவாக வருடிவிட்டாலும் குழந்தை தூங்கும் அல்லது முதுகில் லேசாகத் தட்டிக் கொடுக்கலாம். ஈரத்துணி, ஈர நாப்கினை மாற்றி உலர்ந்த துணி நாப்கினை அணிவித்து தூங்க வைத்தால் குழந்தை சீக்கிரமே தூங்கிவிடும். 

Tags:    

மேலும் செய்திகள்