சமையல் நேரத்தை குறைக்கும் கிச்சன் கேட்ஜெட்ஸ்

வெட்டிய காய்கறிகள், கட்டையுடன் ஒட்டிக்கொள்ளாதபடியும், கத்தியால் கட்டரில் கீறல்கள் விழாதபடியும் மூங்கில் காய்கறி கட்டர் வடிவமைப்பு உள்ளது. வெட்டிய காய்கறிகளை எளிதாக பிரித்து காற்று புகாதபடி சேமித்து வைக்க கட்டருடன் சேர்த்து கன்ெடய்னர்களும் பொருத்தப்பட்டுள்ளது. இதனைச் சுத்தம் செய்வதும் எளிதானது.;

Update:2022-11-27 07:00 IST

எக் குக்கர்:

நீராவியின் மூலம் ஒரே நேரத்தில் 5 முட்டைகளை வேக வைக்க முடியும். முட்டை வெந்த பின்பு குக்கர் தன்னிச்சையாக 'ஆப்' ஆகிவிடும். இதில் முட்டையை சாப்ட், மீடியம், ஹார்ட் என மூன்று விதங்களில் வேக வைக்கலாம். முட்டை வைக்கும் தட்டு, கைப்பிடி என குக்கரின் அனைத்து பாகங்களையும் எளிதாகப் பிரித்து சுத்தம் செய்யும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

டிரை புரூட்ஸ் சாப்பர்:

இந்த சாப்பரை பிரித்து, நட்ஸ் வகைகளை உள்ளே வைத்து தேவையான வடிவில் வெட்டிக்கொள்ளும்படி கைக்கு அடக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்றபடி பிளேடுகளை மாற்றுவது, சுத்தம் செய்வது என எளிதாக கையாள முடியும்.

கார்ன் ஸ்லைசர்:

சூப், குழம்பு, பொரியல் போன்ற உணவு வகைகளுக்காக மக்காச்சோள முத்துக்களை எளிதில் எடுப்பதற்கு கார்ன் ஸ்லைசர் உதவும். இதில் உள்ள கூர்மையான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கத்தி, ஒரே வெட்டில் மக்காச்சோளத்தை பிரித்து எடுக்கும். பாதுகாப்பின் காரணமாக உறுதியான பிளாஸ்டிக் ஹோல்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

நைப் ஷார்ப்பர்:

அனைத்து வகையான மற்றும் வடிவிலான கத்தியைக் கூர்மையாக்க இந்த நைப் ஷார்ப்பர் உதவும். காய்கறிகளை வெட்டுவதற்கு முன்பு சில முறை இந்த ஷார்ப்பருக்குள் கத்தியை விட்டு எடுக்கலாம். இது குறைந்த நேரத்தில் கத்தியைக் கூர்மையாக்கும்.

நூடுல்ஸ் மேக்கர்:

ஒரே சீரான வடிவில் நூடுல்ஸ் தயாரிக்க இந்த நூடுல்ஸ் மேக்கரைப் பயன்படுத்தலாம். சப்பாத்திக்கு தேய்ப்பது போல் மாவை தயாரித்து அதன் மீது நூடுல்ஸ் மேக்கர் வைத்து அழுத்தினால், நீளமான நூடுல்ஸ் கிடைக்கும். சீவல், முறுக்கு தயாரிப்பதற்கும் இந்த நூடுல்ஸ் மேக்கரைப் பயன்படுத்தலாம்.

மூங்கில் கட்டர் வித் கன்டெய்னர்:

வெட்டிய காய்கறிகள், கட்டையுடன் ஒட்டிக்கொள்ளாதபடியும், கத்தியால் கட்டரில் கீறல்கள் விழாதபடியும் மூங்கில் காய்கறி கட்டர் வடிவமைப்பு உள்ளது. வெட்டிய காய்கறிகளை எளிதாக பிரித்து காற்று புகாதபடி சேமித்து வைக்க கட்டருடன் சேர்த்து கன்ெடய்னர்களும் பொருத்தப்பட்டுள்ளது. இதனைச் சுத்தம் செய்வதும் எளிதானது.

கார்லிக் பிரஸ்ஸர்:

வசதியான கைப்பிடியைக் கொண்ட இந்த பூண்டு அழுத்தும் கருவி, எளிதாக பூண்டை பொடிதாக வெட்டுவதற்கு உதவும். இதை சுத்தப்படுத்துவது சுலபம். 

Tags:    

மேலும் செய்திகள்