10-ம் வகுப்பு மாணவி கடத்தல்
10-ம் வகுப்பு மாணவி கடத்தப்பட்டது தொடர்பாக போட்டோகிராபர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.;
சூளகிரி கங்கசந்திரத்தைச் சேர்ந்த போட்டோகிராபர் அமரீஷ் (வயது 23). இவர், 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியை திருமணம் செய்வதாக கூறி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி டவுன் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமித்ரா, கடத்தல் வழக்குப்பதிவு செய்து அமரீசை தேடி வருகிறார்.