இஸ்திரி செய்யும் பெட்டி பராமரிப்பு
பருத்தி பஞ்சை நகப்பூச்சு ரிமூவர் திரவத்தில் தோய்த்து, இஸ்திரி பெட்டி முழுவதும் துடைத்து எடுக்கவும். இது இஸ்திரி பெட்டியில் படிந்துள்ள அழுக்குகளை நீக்கும். பெட்டியை புதிதுபோல பள பளப்பாக்கும்.;
தற்போது பலரும் தங்கள் உடைகளை வீட்டிலேயே இஸ்திரி செய்து கொள்கிறார்கள். இதனால் பணமும், நேரமும் மிச்சமாகும். இஸ்திரி பெட்டிகளில் மின்சாரம் மூலம் இயங்குபவை, நீராவி மூலம் இயங்குபவை என பல விதங்கள் உள்ளன. இதர வீட்டு உபயோகப் பொருட்களை சுத்தம் செய்வது போல, இஸ்திரி பெட்டிகளையும் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் சுத்தம் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டால், அவை நீண்ட நாட்கள் நீடித்து உழைக்கும். அதற்கான குறிப்புகள் இங்கே…
செய்தித்தாள் அல்லது பிரவுன் காகிதத்தின் மீது சிறிதளவு உப்பைத் தூவி, அதன்மேல் இஸ்திரி செய்யவும். இது இஸ்திரி பெட்டியின் மீது இருக்கும் கறையை நீக்கும்.
இஸ்திரி பெட்டியின் மீதுள்ள பிளாஸ்டிக் கறையை நீக்க, ஒரு கிண்ணத்தில் ஐஸ் கட்டிகளை நிரப்பி, இஸ்திரி பெட்டியை அதன் மேலே வைக்கவும். இப்போது இஸ்திரி பெட்டியின் மீதுள்ள பிளாஸ்டிக் சற்று இளகும். அதை ஒரு பிளாஸ்டிக் கத்தியைக் கொண்டு நீக்கவும்.
பருத்தி பஞ்சை நகப்பூச்சு ரிமூவர் திரவத்தில் தோய்த்து, இஸ்திரி பெட்டி முழுவதும் துடைத்து எடுக்கவும். இது இஸ்திரி பெட்டியில் படிந்துள்ள அழுக்குகளை நீக்கும். பெட்டியை புதிதுபோல பள
பளப்பாக்கும்.
சம அளவு தண்ணீர் மற்றும் வினிகர் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பழைய துணி அல்லது பருத்தி பஞ்சை இதில் தோய்த்து, இஸ்திரி பெட்டியை துடைக்கவும். இது இஸ்திரி பெட்டியில் உள்ள துருக்கறை, கீறல் மற்றும் பூச்சிகளின் எச்சங்கள் போன்றவற்றை சுத்தம் செய்யும்.
இஸ்திரி பெட்டி சுத்தம் செய்யும் பசை அல்லது உப்பு, இரண்டு தேக்கரண்டி பேக்கிங் சோடா ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தண்ணீரில் கலந்து, இஸ்திரி பெட்டியை சுத்தம் செய்யவும். இது இஸ்திரி பெட்டியில், நீராவி வெளிவரும் இடங்களில் உள்ள கசடுகளை நீக்க உதவும்.
இஸ்திரி பெட்டி பயன்படுத்தும்போது, அது சூடானவுடன் மின் இணைப்பைத் துண்டிப்பது நல்லது. இதன் மூலம் இஸ்திரி பெட்டியில் எவ்விதமான ஒயர் இணைப்பும் சேதப்படாமல் காக்கலாம். ஆட்டோமேட்டிக் இஸ்திரி பெட்டிக்கும் இம்முறையைப் பயன்படுத்தலாம்.
இஸ்திரி செய்ய சரியான டேபிள் இல்லாதவர்கள், குறைந்தபட்சம் மூன்று அடுக்கு இருக்கும்படியான துணி விரிப்பை சமதளமாக பயன்படுத்துவது நல்லது. இது இஸ்திரி செய்யும்போது, பெட்டியில் குழிகள், கீறல்கள் மற்றும் கறைகள் உண்டாவதைத் தடுக்கும்.