பெட்ரோல் செலவை குறைப்பது எப்படி?

வாகனத்தில் ஏதாவது பழுது ஏற்பட்டால், ‘ஓடும்வரை ஓடட்டும்’ என நினைக்காமல் உடனே பழுதை நீக்குவது அவசியம். ஏனென்றால் பழுதான நிலையில் இயக்கப்படும் வாகனங்களுக்கு, வழக்கத்தை விட 20 சதவிகிதம் அதிக எரிபொருள் செலவாகும்.;

Update: 2022-09-04 01:30 GMT

ரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் வாகனங்களுக்குத் தேவையான எரிபொருள் விலையும் அன்றாடம் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், வாகன பயன்பாட்டில் எரிபொருள் சிக்கனத்தை மேற்கொள்ளும் வழிகள் குறித்து வல்லுனர்கள் அளிக்கும் குறிப்புகளை இங்கே பார்க்கலாம்.

 எவ்வித வாகனமாக இருந்தாலும் அதன் டயர்களில் பரிந்துரை செய்யப்பட்ட காற்றழுத்தம் இருக்க வேண்டும். மேலும், டயர்கள் அதன் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் தேய்ந்து போயிருந்தால் அவற்றை மாற்றிவிடுவது நல்லது.

 சாலைகளில் 40 முதல் 55 கி.மீ. வேகத்தில் ஓட்டுவதே எரிபொருள் சிக்கனத்துக்கு வழிவகுக்கும்.

 குண்டும், குழியுமான சாலை கொண்ட குறுக்கு வழியைவிட, சீரான சாலையில் மிதமான வேகத்தில், பயணிப்பது எரிபொருள் சிக்கனத்துக்கு ஏற்றது.

 எப்போதும் தெரிந்த பாதையில், குழப்பமில்லாமல் பயணிப்பதே நல்லது. புதிய இடங்களுக்கு செல்லும்போது, 'மேப்' வழிகாட்டியை பயன்படுத்தினாலும், அந்தப் பகுதியில் இருக்கும் நபர்களிடம் வழி கேட்டுச் செல்வது எளிதாக இலக்கை அடைய உதவும்.

 எப்போதும் டாப் கியரில், அளவான வேகத்தில் வாகனத்தை இயக்குவதன் மூலம் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தலாம்.

 வாகனத்தில் ஏதாவது பழுது ஏற்பட்டால், 'ஓடும்வரை ஓடட்டும்' என நினைக்காமல் உடனே பழுதை நீக்குவது அவசியம். ஏனென்றால் பழுதான நிலையில் இயக்கப்படும் வாகனங்களுக்கு, வழக்கத்தை விட 20 சதவிகிதம் அதிக எரிபொருள் செலவாகும்.

 போக்குவரத்து சிக்னல்களில் வாகன இயக்கத்தை நிறுத்தி வைப்பது எரிபொருள் சிக்கனத்துக்கு ஏற்ற வழி.

 இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணிப்பதும், எரிபொருள் அதிகமாக செலவாக வழி வகுக்கும். வாகனம் எதுவாக இருந்தாலும், ஓவர்லோடு காரணமாக, வழக்கத்தை விட 2 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை அதிகமாக எரிபொருள் செலவாகும்.

 பெட்ரோல் நிரப்பும்போது டேங்க்கை முழுவதுமாக நிரப்பாமல் சிறிது வெற்றிடம் விடுவது நல்லது. அத்துடன், பெட்ரோல் டேங்க் மூடியை நன்றாக மூடுவதும் அவசியம்.

 பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக பெட்ரோலியம் வாயுவை எரிபொருளாக பயன்படுத்த முயற்சிக்கலாம்.

 வாகனங்களை எப்போதும் நிழலான பகுதிகளில் நிறுத்தி வைப்பதே நல்லது. வெயிலில் நிறுத்தினால் வெப்பக் கதிர்கள் வாகனத்தை சூடாக்குவதுடன், எரிபொருள் ஆவியாதலையும் துரிதப்படுத்தும். நிழல் இல்லாத நிலையில், வாகனத்தை அதற்கான 'கவர்' கொண்டு மூடிவைக்கலாம்.

 எப்போதும் இருசக்கர வாகனங்களையே பயன்படுத்தாமல், மாதத்தில் சில நாட்கள் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவதும் பெட்ரோல் சிக்கனத்துக்கு வழி வகுக்கும். 

Tags:    

மேலும் செய்திகள்