திருமணத்துக்குப் பின்னும் பெண்களுக்கு நட்பு அவசியம்

திருமண வாழ்க்கையில் ஏற்படும் தவறான புரிதல்கள், கருத்து வேறுபாடுகள், அதனால் ஏற்படும் விரக்தி, துக்கம், கோபம் ஆகியவற்றால் பல பெண்கள் மன அழுத்தத்தில் இருப்பார்கள். அவர்கள் தங்கள் உணர்வுகளை தங்களுடைய நலன் மீது உண்மையான அக்கறை கொண்டுள்ள நெருங்கிய நட்பிடம் பகிர்ந்துகொண்டால், பிரச்சினைகளுக்கான தீர்வுகள் கிடைப்பதோடு, அவர்களின் மனஅழுத்தமும் குறையும்.;

Update: 2023-08-06 01:30 GMT

பெண்களைப் பொறுத்தவரையில் நட்பு வட்டம் என்பது நிலையற்றதாகவும், குறைந்த ஆயுள் கொண்டதாகவும் இருந்து வருகிறது. குறிப்பாக, திருமணத்துக்குப் பின்னர் பல பெண்கள் தங்களுடைய நட்பு வட்டத்தை சுருக்கிக் கொள்கின்றனர்.

திருமணத்துக்குப் பிறகு பெண்களுக்கு கிடைக்கும் நட்புகள் அனைத்துமே அவர்களுடைய கணவர் மற்றும் குழந்தைகளின் நட்பு வட்டத்தை சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். இந்த நட்புறவில் ஒருவர் மற்றவரை முழுவதுமாக புரிந்து கொள்கிறார்களா? என்பது கேள்விக்குறியே.

விருப்பங்களை ஆதரிப்பது, குறைபாடுகளை எளிதில் ஏற்றுக் கொள்வது, மன்னிப்பது என உங்களுடைய சுயமரியாதைக்கு நன்மை பயக்கும் தனித்துவமான பண்புகள் நட்புக்கு இருக்கிறது. திருமணத்திற்குப் பிறகு அவ்வப்போது நண்பர்களை சந்திப்பதில் சிரமங்கள் இருக்கலாம். இருப்பினும், வாழ்வின் நம்பிக்கை மற்றும் ஆதரவிற்கான அடித்தளம் நண்பர்கள்தான் என்பதை மறந்துவிடாதீர்கள்.

திருமண வாழ்க்கையில் ஏற்படும் தவறான புரிதல்கள், கருத்து வேறுபாடுகள், அதனால் ஏற்படும் விரக்தி, துக்கம், கோபம் ஆகியவற்றால் பல பெண்கள் மன அழுத்தத்தில் இருப்பார்கள். அவர்கள் தங்கள் உணர்வுகளை தங்களுடைய நலன் மீது உண்மையான அக்கறை கொண்டுள்ள நெருங்கிய நட்பிடம் பகிர்ந்துகொண்டால், பிரச்சினைகளுக்கான தீர்வுகள் கிடைப்பதோடு, அவர்களின் மனஅழுத்தமும் குறையும்.

திருமணத்துக்குப் பின்னர் பெண்கள் தோழிகளுடன் சேர்ந்து ஷாப்பிங் செல்வது, உடற்பயிற்சி வகுப்புகளுக்கு செல்வது, குறுகிய கால பயணம் மேற்கொள்வது போன்றவற்றின் மூலம் தங்கள் நட்பை புதுப்பிக்கவும், பலப்படுத்தவும் முடியும்.

எதிர்பாலின நட்பு உள்ளவர்கள், உங்கள் நட்பு வட்டம் குறித்து கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் எந்தவித ஒளிவு மறைவும் இல்லாமல் தெரிவிப்பது நல்லது. இதன்மூலம் தோழமையால் உறவுகளுக்குள் ஏற்படும் கருத்து வேறுபாட்டையும், தவறான புரிதல்களையும் தடுக்க முடியும்.

Tags:    

மேலும் செய்திகள்