பண்டிகைக் காலத்தில் பாதுகாப்பான ஷாப்பிங் அனுபவம்
பாதுகாப்பான முறையில் ஷாப்பிங் செய்ய காலை நேரமே ஏற்றது. கூட்ட நெரிசலில், தடுமாற்றம் இல்லாமல் விரும்பியவற்றை தேர்வு செய்து வாங்கலாம். காலை உணவுக்கு பின்னர் ஷாப்பிங் சென்று, மதிய உணவுக்கு முன்னர் வீட்டுக்கு திரும்புவதே பாதுகாப்பானதாக இருக்கும். மழை மற்றும் வெயில் காலங்களில் குடை எடுத்துச் செல்வது நல்லது.;
பண்டிகைக் காலங்களில் கிடைக்கும் சலுகைகளைப் பயன்படுத்தி ஆடை ஆபரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவற்றை பலரும் வாங்குவார்கள். ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது தற்போது அதிகரித்து இருந்தாலும், நேரடியாக கடைகளுக்குச் சென்று பொருட்களைப் பார்த்து வாங்க விரும்புபவர்கள் ஏராளம். இவ்வாறு ஷாப்பிங் செய்வதற்கு செல்லும்போது பணம் மற்றும் உடமைகளை கவனமாகப் பாதுகாப்பது முக்கியம். அதற்கான ஆலோசனைகள் இதோ…
விழாக்கால ஷாப்பிங் செல்லும்போது குழந்தைகள், டீன் ஏஜ் பருவத்தினர் மற்றும் வீட்டின் மூத்த உறுப்பினர்களும் உடன் வர விரும்புவார்கள். அதனால், கூட்ட நெரிசல் கொண்ட வார இறுதி நாட்களைத் தவிர்த்து மற்ற நாட்களில் ஷாப்பிங் செல்லலாம்.
பாதுகாப்பான முறையில் ஷாப்பிங் செய்ய காலை நேரமே ஏற்றது. கூட்ட நெரிசலில், தடுமாற்றம் இல்லாமல் விரும்பியவற்றை தேர்வு செய்து வாங்கலாம். காலை உணவுக்கு பின்னர் ஷாப்பிங் சென்று, மதிய உணவுக்கு முன்னர் வீட்டுக்கு திரும்புவதே பாதுகாப்பானதாக இருக்கும். மழை மற்றும் வெயில் காலங்களில் குடை எடுத்துச் செல்வது நல்லது.
கைக்குழந்தைகளுடன் செல்லும்போது கணவர் அல்லது உறவினர் துணையுடன் செல்வது சிறந்தது. டயாப்பர், வெந்நீர், பால், கூடுதல் உடைகள் ஆகியவற்றை எடுத்துச் செல்வது அவசியம். பெரியவர்கள் உடன் வந்தால் அவர்களுக்கு போதுமான தண்ணீர், அவசிய மான மருந்துகள் ஆகியவற்றை மறக்கா மல் எடுத்துக்கொள்ள வேண்டும்.
சுட்டிக் குழந்தைகளுக்கு ஏதாவது வாங்குவதாக இருந்தால் மட்டுமே அவர்களை உடன் அழைத்துச் செல்லலாம். ஷாப்பிங் மால்களில் குழந்தைகள் 'கேம்ஸ்' விளையாடும் பகுதிகளில், அவர்களை தனியாக விட்டுச் செல்வது நல்லதல்ல.
கூட்ட நெரிசலில், நகை, பணம், செல்போன் போன்றவை திருடு போகும் வாய்ப்பு அதிகம். எனவே, பெண்கள் தனியாக பண்டிகைக் கால பர்ச்சேஸ் செய்வதை தவிர்ப்பது நல்லது.
புதிய ஆடைகளை அணிந்து பார்த்து வாங்குவதற்கு வசதியாக உடைகள் அணிந்து செல்ல வேண்டும். ஷாப்பிங் செல்லும்போது பெண்கள் தங்க நகைகள் அணிவதைத் தவிர்ப்பதே பாதுகாப்பானது.
லிப்டில் போகும் சமயத்தில் கூட்டம் குறைந்த பின்னர் செல்வதே நல்லது. தனியாக அறிமுகம் இல்லாதவருடன் லிப்டில் செல்ல வேண்டிய சூழலை தவிர்க்க வேண்டும்.
இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஷாப்பிங் நிறுவன வளாகத்தில் நிறுத்தி, பாஸ் போட்டு விட்டுச் செல்வது பாதுகாப்பானது. சாலை ஓரங்களில் வாகனத்தை நிறுத்தி விட்டுச் செல்வது சிரமங்களுக்கு வழிவகுக்கும்.
ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள் ஆகிய இடங்களில் அளிக்கப்படும் 'என்கிரிப்ட்' செய்யப்படாத இலவச வைபை சேவையை பயன்படுத்தும்போது, எளிதாக ஹேக்கர்கள் ஊடுருவி, உங்கள் வங்கி பரிவர்த்தனைகள், பாஸ்வேர்டு போன்ற தகவல்களை திருட முடியும். அதனால், உங்கள் மொபைல் டேட்டாவை மட்டுமே பயன்படுத்துங்கள்.
கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு ஒரு முறை 'ஸ்வைப்' செய்யப்பட்டு அதற்கான ரசீது வரவில்லை என்றால், வங்கி கணக்கை சரிபார்த்த பின்னரே இரண்டாம் முறை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.