பேபி கேரியர்
‘ஹனிகோம்ப்’ என்னும் துணி வகையில் நெய்வதால், இந்த பேபி கேரியர் குழந்தைக்கு இதமாகவும், மிருதுவாகவும் இருக்கும்.;
வெளியிடங்களுக்கு, சிறு குழந்தைகளை பாதுகாப்பாக அரவணைத்தபடி கொண்டு செல்லும் வகையில் உருவாக்கப்பட்டது பேபி கேரியர். அவரவர் வசதிக்கு ஏற்றவாறும், நவீன வடிவமைப்பிலும், இன்றைய டிரெண்டுக்கு பொருந்துமாறும் பலவிதமான பேபி கேரியர் கிடைக்கிறது. அதைப் பற்றிய தொகுப்பு இங்கே…
முன் மற்றும் பின்புற கேரியர்:
இந்த கேரியரில் முன் மற்றும் பின்புறத்தில் குழந்தைகளை உட்கார வைத்துக்கொள்ளலாம். இதில் குழந்தையின் பால்புட்டியை வைத்துக்கொள்ளும் வசதியும் உள்ளது. 'ஹனிகோம்ப்' என்னும் துணி வகையில் நெய்வதால், இந்த பேபி கேரியர் குழந்தைக்கு இதமாகவும், மிருதுவாகவும் இருக்கும். பின்புற கேரியரில் குழந்தை கீழே விழாமல் இருப்பதற்கு சீட் பெல்ட்டும் இணைக்கப்பட்டிருக்கும்.
ஹிப் சீட் பேபி கேரியர்:
முன் மற்றும் பின்புறத்தில் கேரியரை பொருத்த இயலாதவர்களுக்காக வடிவமைக்கப்பட்டது 'ஹிப் சீட் கேரியர்'. இது பாதுகாப்பானது, எங்கும் எளிதாக எடுத்துச் செல்லக்கூடியது.
ஸ்லிங் ரிங் பேபி கேரியர்:
குழந்தைகள் தூங்கும்போதும் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட பேபி கேரியர், மிருதுவான துணியால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுத்தாதவாறு உருவாக்கப்பட்டது.