ரூ.1,000 கோடி வசூலிக்குமா கங்குவா? - தயாரிப்பாளர் பதில்

3டி முறையில் 'கங்குவா' திரைப்படம் அடுத்த மாதம் 14-ம் தேதி வெளியாக உள்ளது.

Update: 2024-10-18 15:42 GMT

சென்னை,

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படம் அடுத்த மாதம் 14-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு, கன்னடம், சைனீஸ், ஸ்பானிஷ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், இப்படம் ரூ.2,000 கோடி வசூலிக்கும் என்று படத்தின் தயாரிப்பாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஒரு பேட்டியில், ஸ்டுடியோ கிரீன் கீழ் கங்குவா படத்தை தயாரிக்கும் கே.இ.ஞானவேல் ராஜாவிடம், இந்திய சினிமாவில் உலகளவில் ரூ.1,000 கோடி வசூலித்த படங்களில் கேஜிஎப் 2 தவிர இந்தி மற்றும் தெலுங்கு படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இதுவரை எந்த தமிழ் படத்தாலும் அந்த சாதனையை படைக்க முடியவில்லை. கங்குவா அதை மாற்ற முடியுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "நான் ரூ. 2,000 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை எதிர்பார்க்கிறேன், அதை ஏன் ரூ.1,000 கோடி என்று குறைத்து மதிப்பிடுகிறீர்கள்" என்று பதிலளித்தார்

Tags:    

மேலும் செய்திகள்