புதிய தோற்றத்தில் சதீஷ் - உருவாகிறதா தமிழ் படம் 3?

நடிகர் சதீஷ் தனது இணையத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.;

Update: 2024-10-18 12:15 GMT

சென்னை,

சிவா நடிப்பில் சிஎஸ் அமுதன் இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் 'தமிழ் படம்'. இதனைத்தொடர்ந்து இதன் 2-ம் பாகம் வெளியாகி கவனம் பெற்றது. இதில், வில்லனாக சதீஷ் நடித்திருந்தார். இதனையடுத்து இதன் 3-ம் பாகம் வருமா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், நடிகர் சதீஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் 'தமிழ் படம் 3' வருமா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'எதிர் நீச்சல்' படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்து கவனம் பெற்றவர் சதீஷ். அதனைத்தொடர்ந்து, கத்தி, மான் கராத்தே, ஆம்பள உள்ளிட்ட படங்களில் இவரது நகைச்சுவை ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டன.

இவ்வாறு தொடர்ந்து நகைச்சுவை நடிகராக நடித்து வந்த சதீஷ் நாய்சேகர், ஓ மை கோஸ்ட், வித்தைக்காரன், கான்ஜூரிங் கண்ணப்பன், சட்டம் என் கையில் ஆகிய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தார். இந்த படங்கள் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றன.

Tags:    

மேலும் செய்திகள்