'அவசியம் இல்லை...'-பாலிவுட்டில் கவனம் செலுத்தாதது பற்றி பகிர்ந்த மகேஷ் பாபு

மகேஷ் பாபுவுக்கு பாலிவுட்டில் பல வாய்ப்புகள் வந்திருக்கின்றன;

Update:2024-08-13 01:33 IST

சென்னை,

மகேஷ் பாபு, 1979-ம் ஆண்டு வெளியான 'நீடா' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். அதனைத்தொடர்ந்து அவர் குழந்தை நட்சத்திரமாக எட்டு படங்களில் நடித்தார். பின்னர், 1999-ம் ஆண்டு வெளியான 'ராஜ குமாருடு' மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இது அவருக்கு சிறந்த அறிமுக நடிகருக்கான விருதை வாங்கி கொடுத்தது.

அதனைத்தொடர்ந்து, முராரி மற்றும் அதிரடித் திரைப்படமான ஒக்கடு மூலம் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்தார். இவ்வாறு தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபுவுக்கு பாலிவுட்டில் பல வாய்ப்புகள் வந்திருக்கின்றன என்பது பலருக்கு தெரியாது.

ஆம், பாலிவுட்டில் பல வாய்ப்புகள் வந்ததாக முன்னதாக ஒரு பேட்டியில் மகேஷ் பாபு தெரிவித்திருந்தார். அவர் கூறுகையில்,

'எனக்கு இந்தியில் நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. இருப்பினும், அதில் எதிலும் நான் ஆர்வம் காட்டவில்லை. ஏனென்றால், நான் என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. தெலுங்கு திரையுலகில் நான் பெறும் பாராட்டும் வெற்றியும் ஈடு இணையற்றது. அதனால், டோலிவுட்டைத் தவிர வேறு எந்தத் திரைப்படத் துறைகளுக்கும் செல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை, என்றார்.

மகேஷ் பாபுவின் இந்த கருத்துகள் வைரலாகி, திரையுலகினரின் கவனத்தையும் அவரது ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது.

Tags:    

மேலும் செய்திகள்