'விஜய் ஒரு சூப்பர் ஹீரோ' - நடிகர் துல்கர் சல்மான் பாராட்டு

கடந்த 2020-ம் ஆண்டு வெளியான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் துல்கர் சல்மான் நடித்திருந்தார்.;

Update: 2024-11-18 07:28 GMT

சென்னை,

துல்கர் சல்மான் தற்போது தனது நடிப்பில் வெளியான 'லக்கி பாஸ்கர்' படத்தின் பிரமாண்ட வெற்றியின் கொண்டாட்டத்தில் உள்ளார். இப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. தமிழ் ரசிகர்களிடமிருந்தும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது.

முன்னதாக கடந்த 2020-ம் ஆண்டு, துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான படம் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'. இப்பட விழாவில், நடிகர் துல்கர் சல்மான், நடிகர் விஜய்யை 'சூப்பர் ஹீரோ' என கூறி இருக்கிறார். மேலும் 'மாஸ்டர்' படத்தில் விஜய்யின் நடனத்தை பாராட்டினார்.

இது குறித்து அவர் கூறுகையில், 'விஜய் ஒரு சூப்பர் ஹீரோ. அவரால் தூக்கத்தில் கூட சிரமமின்றி நடனமாட முடியும். அவரது நடனத்துக்கு நான் மிகப்பெரிய ரசிகன். 'மாஸ்டர்' படத்தில் இடம்பெற்ற 'வாத்தி கம்மிங்' பாடலில் விஜய்யின் நடனத்தைப் பார்க்க ஆச்சர்யமாக இருந்தது' என்றார்.


Tags:    

மேலும் செய்திகள்