விஜய் செய்யாததை செய்துகாட்டிய தனுஷ், விஜய் சேதுபதி
விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது
சென்னை,
பிரபல நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. விஜய் சேதுபதியின் 50-வது படமான இது ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்தது. இப்படம் தற்போது ஓடிடியில் உள்ளது.
இதேபோல் தற்போது தனுஷின் 50-வது படமான 'ராயன்' வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ. 24 கோடி வரை வசூலித்துள்ளது. இவ்வார இறுதியில் இப்படம் 60 முதல் 70 கோடி ரூபாயை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித்தின் 50-வது படமான மங்காத்தா படமும் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. இவ்வாறு பிரபல நடிகர்களின் 50-வது படம் ஹிட் அடிக்கையில் நடிகர் விஜய்யின் 50- வது படம் அதை செய்யவில்லை. விஜய்யின் 50-வது படம் சுறா. 2010-ம் ஆண்டு வெளியான இப்படம் விஜய்யின் மோசமான படங்களில் ஒன்றாக உள்ளது.