உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய வைரமுத்து

உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 47-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.;

Update: 2024-11-27 04:51 GMT

சென்னை,

தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 47-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி ஏராளமானோர் அதிகாலை முதலே அவருக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "ஒருநாள் கலைஞரும் நானும் கோபாலபுரத்தில் உரையாடிக்கொண்டிருந்தோம், உதயநிதி தன் மனைவி கிருத்திகாவோடு வந்தார்; நின்றுகொண்டே பேசினார் கலைஞர் மறுத்த ஒருகருத்தை தன் வாதத்தை முன்னிறுத்திச் சாதித்துச் சென்றார். அப்போதே தெரிந்துகொண்டேன் வலிவும் தெளிவும் மிக்க வல்லவர் இவரென்று.

உதயநிதி பேரீச்சம் பழம்போல் மென்மையானவர்; ஆனால் அதன் விதையைப்போல் உறுதியானவர். சின்னச் சின்ன எதிர்ப்புகள் இவரைச் சிதைப்பதில்லை. குன்றிமணி முட்டிக் குன்றுகள் சாய்வதில்லை, காலம் இவரை மேலும் மேலும் செதுக்கும்; புதுக்கும், "தம்பீ வா தலைமையேற்க வா" அண்ணாவிடம் கடன்வாங்கி அண்ணன் வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்