கோவில் கட்டிய ரசிகரை நேரில் அழைத்து பேசிய நடிகர் ரஜினிகாந்த்
தனக்காக கோவில் கட்டிய ரசிகரை, நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.;
மதுரை,
மதுரை திருமங்கலத்தை சேர்ந்த தீவிர ரஜினி ரசிகரான கார்த்திக் என்பவர், நடிகர் ரஜினிகாந்திற்கு கோவில் ஒன்றை கட்டியுள்ளார். அவர் தினந்தோறும் அந்த கோவிலில் உள்ள ரஜினி சிலைக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தி வருகிறார்.
இது குறித்து அறிந்த நடிகர் ரஜினிகாந்த், தனது தீவிர ரசிகர் கார்த்திக் மற்றும் அவரது குடும்பத்தினரை போயஸ் இல்லத்திற்கு நேரில் வரவழைத்து பேசினார். பின்னர் கார்த்திக் மற்றும் அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து நடிகர் ரஜினிகாந்த் உடன் அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.