'டாய் ஸ்டோரி 5' படம் ரிலீஸ் குறித்த அப்டேட்

டிஸ்னி மற்றும் பிக்சர் 'டாய் ஸ்டோரி 5' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.;

Update:2024-08-12 08:41 IST

கலிபோர்னியா,

'டாய் ஸ்டோரி' என்பது பிக்சர் அனிமேஷன் ஸ்டுடியோவால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை கதையாகும். இந்த படத்தின் கதை, மனிதர்களுக்குத் தெரியாமல் ரகசியமாக வாழும் பொம்மைகளை மையமாகக் கொண்டது. இந்த படத்தின் முதல் பாகம் 1995-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த படம் 5 பாகங்களை கொண்டது.

அந்த வகையில் சமீபத்தில் கலிபோர்னியாவில் நடைபெற்ற டி23 நிகழ்ச்சியின் போது டிஸ்னி மற்றும் பிக்சர் 'டாய் ஸ்டோரி 5' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த 5-வது பாகத்தினை இயக்குனர் ஆண்ட்ரூ ஸ்டாண்டன் இயக்குகிறார்.

அதன்படி, 'டாய் ஸ்டோரி' திரைப்படத்தின் அசல் படைப்பாளிகளில் ஒருவரும் பிக்சரின் தலைமை அதிகாரியுமான பீட் டாக்டர் 'டாய் ஸ்டோரி 5' படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார். இந்த 5-வது பாகம் பார்வையாளர்கள் இதுவரை கண்டிராத ஆச்சரியங்களை அளிக்கும் என்றும் உறுதியளித்துள்ளார். மேலும் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவலும் வெளியாகி உள்ளது. அதன்படி, 'டாய் ஸ்டோரி 5' படம் வருகிற 2026-ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்