பிரபாஸை 'ஜோக்கர்' என விமர்சித்த பிரபல நடிகர்...பதிலடி கொடுத்த இயக்குனர்

நடிகர் அர்ஷத் வர்ஷி 'கல்கி 2898 ஏடி' படத்தில் பிரபாஸ் ஜோக்கர்போல இருந்ததாக விமர்சித்திருந்தார்.;

Update:2024-08-20 19:34 IST

சென்னை,

பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப்பச்சன், கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் 17-ம் தேதி வெளியான படம் 'கல்கி 2898 ஏடி'. நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் ரூ.1,050 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

சமீபத்தில், பிரபல நடிகர் அர்ஷத் வர்ஷி, 'கல்கி 2898 ஏடி' படத்தில் பிரபாஸ் ஜோக்கர்போல இருந்ததாக விமர்சித்திருந்தார். அவரது இந்த கருத்து பிரபாஸ் ரசிகர்களையும், தெலுங்கு திரையுலகினரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

இந்நிலையில், பிரபாஸை விமர்சித்த அர்ஷத் வர்ஷிக்கு பிரபல இயக்குனர் அஜய் பூபதி பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

'பிரபாஸ் நம் தேசத்தின் பெருமை. இந்திய சினிமாவை உலகப் பார்வையாளர்களிடம் எடுத்துச் செல்ல எல்லாவற்றையும் கொடுத்தவர் பிரபாஸ். இதன் மூலம் படத்தின் மீதும் அவரின் மீதும் உள்ள பொறாமையை எங்களால் பார்க்க முடிகிறது,' இவ்வாறு தெரிவித்துள்ளார்.

'கல்கி 2898 ஏடி' படம் வரும் 22-ம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்