துப்பாக்கிய பிடிங்க சிவா... 'தி கோட்' படத்தின் காட்சி குறித்து பேசிய சிவகார்த்திகேயன்

விஜய்யின் 'தி கோட்' படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.

Update: 2024-11-20 16:09 GMT

சென்னை,

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய்யின் மிரட்டலான நடிப்பில் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் 'தி கோட்'. இந்த படத்தில் விஜய்யுடன், பிரபு தேவா, பிரசாந்த், மோகன், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும், திரிஷா, சிவகார்த்திகேயன் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் 'துப்பாக்கியை பிடிங்க சிவா' என சொல்லி, விஜய் அவரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு செல்வார். விஜய் அரசியலுக்கு செல்லும் நிலையில் இனி சிவகார்த்திகேயன் தான் அடுத்த விஜய் என நெட்டிசன்களும் இந்த காட்சியை பார்த்துவிட்டு பேச தொடங்கிவிட்டனர். 

இந்த நிலையில், இந்த காட்சி குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசியுள்ளார். அதில் 'அந்த காட்சி பற்றி எனக்கு முன்பு தெரியாது. முந்தைய நாள் தான் எனக்கு சீன் பேப்பர் கொடுத்தார்கள். "இதை பாத்துக்கோங்க சுடக்கூடாது" என்று தான் வெங்கட் பிரபு வசனம் எழுதி இருந்தார். ஆனால் விஜய் தான் அதை மாற்றி 'துப்பாக்கியை பிடிங்க சிவா' என பேசினார். எனக்கும் ஆச்சர்யமாக இருந்தது. அவர் எனக்கு கொடுத்த அன்பாக தான் அதை நான் பார்க்கிறேன்' என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்