விபத்தில் சிக்கிய ராஷ்மிகா மந்தனா: நலமாக இருப்பதாக பதிவு
ராஷ்மிகா மந்தனா நலமுடன் இருப்பதாக பதிவிட்டுள்ளார்.
சென்னை,
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. தமிழில் கார்த்தியின் 'சுல்தான்' படம் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக 'வாரிசு' படத்தில் நடித்தார். பல மொழிகளில் வெளியான 'புஷ்பா' படம் அவருக்கு திருப்புமுனை அமைந்தது. அதனைத்தொடர்ந்து, புஷ்பா 2, சாவா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்தநிலையில், ராஷ்மிகா மந்தனா அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராமில் தனது செயல்பாடு இல்லாததற்கான காரணத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,
'கடந்த மாதம் நான் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இல்லாமல் இருந்தேன். ஏனென்றால் எனக்கு ஒரு சிறிய விபத்து ஏற்பட்டது. பின்னர் அதிலிருந்து குணமடைய மருத்துவர்களின் அறிவுரையின்படி வீட்டில் ஓய்வெடுத்தேன். நான் இப்போது நன்றாக இருக்கிறேன். உங்களை கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை கொடுங்கள். நாளை நமக்கு உண்டா என்று தெரியாது, எனவே ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருங்கள், என்று பதிவிட்டுள்ளார்.