'ராமாயணம்': லட்சுமணனாக நடிப்பதை உறுதி செய்த பிரபல நடிகர்

'ராமாயணம்' படத்தில் லட்சுமணனாக நடிப்பது யார்? என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

Update: 2024-12-05 08:17 GMT

சென்னை,

நிதிஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம் கதையை மையமாக வைத்து தயாராகும் 'ராமாயணம்' படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி ஆகியோர் நடிக்கின்றனர். கன்னட நடிகர் யாஷ் ராவணனாக வருகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் அனுமானாக சன்னி தியோல், கும்பகர்ணனாக பாபிதியோல் ஆகியோர் நடிக்கின்றனர். இதனையடுத்து, இப்படத்தில் லட்சுமணனாக நடிப்பது யார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்நிலையில், அந்த எதிர்பார்ப்புக்கு விடை கிடைத்துள்ளது.

அதன்படி, இப்படத்தில் லட்சுமணனாக பிரபல நடிகர் ரவி துபே நடிக்கிறார். இதனை அவரே தற்போது தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில்,

'ராமாயணம் படத்தில் நடிப்பதை பொறுப்பில்லாமல் உளறி நிதிஷ் திவாரி சாரின் திட்டத்தை நான் கெடுக்க விரும்பவில்லை. இதனால்தான் அதைப்பற்றி இதுவரை பேசவில்லை. இறுதியாக இதை தெரிவிக்க தயாரிப்பாளர்களிடம் அனுமதி பெற்றுள்ளேன். படத்தில் நான் லட்சுமணனாக நடிக்கிறேன். ரன்பீர் கபூர் போன்ற ஒரு மெகா ஸ்டாருடன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல் முறை. அவர் எனக்கு மூத்த சகோதரர் போன்றவர்' என்றார்.

ரூ.1,000 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வரும் ராமாயணம் படத்தின் முதல் பாகம் 2026-ம் ஆண்டு தீபாவளிக்கும் இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாக உள்ளது. குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்