இயக்குனர் ஹரியுடன் கைகோர்க்கும் விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி, சிங்கம் பட இயக்குனர் ஹரியுடன் கூட்டணி அமைக்கப் போகிறார் என புதிய தகவல் வெளிவந்துள்ளது.

Update: 2024-12-23 12:58 GMT

சென்னை,

தமிழ் சினிமாவில் வலம் வரும் முன்னணி இயக்குனர்களின் ஒருவர் ஹரி. இவர் சாமி, ஐயா, ஆறு, வேல், சிங்கம் ஆகிய படங்களை இயக்கிய ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். கடைசியாக இவருடைய இயக்கத்தில் ரத்னம் எனும் திரைப்படம் வெளியானது. விஷால், பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி ஆகியோர் நடித்திருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து இயக்குனர் ஹரி, விஜய் சேதுபதி நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் விடுதலை 2 திரைப்படம் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. அடுத்தது ட்ரெயின், ஏஸ், காந்தி டாக்ஸ் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ள விஜய் சேதுபதி இன்னும் சில படங்களில் நடித்து வருகிறார். இவ்வாறு அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வரும் விஜய் சேதுபதி, இயக்குனர் ஹரியுடன் கூட்டணி அமைக்க போகிறார் என்று புதிய அப்டேட் வெளிவந்துள்ளது.

மேலும் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.அடுத்தது விஜய் சேதுபதி, ஹரி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தினை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்