ஜீவா - ராஷி கன்னா நடிக்கும் புதிய படம்: வெளியான முக்கிய அப்டேட்

பிளாக் படத்தையடுத்து ஜீவா, பா.விஜய் இயக்கத்தில் நடிக்கிறார்.

Update: 2024-12-24 01:21 GMT

சென்னை,

'ஆசை ஆசையாய்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜீவா. இவர் 'சிவா மனசுல சக்தி, கற்றது தமிழ், கொரில்லா, ரவுத்திரம், கலகலப்பு 2 போன்ற படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார். கடைசியாக இவர் பிளாக் படத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தையடுத்து ஜீவா, பா.விஜய் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். இதில் அர்ஜுன், ராஷி கன்னா, யோகி பாபு, விடிவி கணேஷ் மற்றும் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த நிலையில் வேல்ஸ் நிறுவனம் இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தின் தலைப்பு மற்றும் ரிலீஸ் தேதி இன்று மாலை 5.01 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்