தெறி படத்தின் ரீமேக்கான 'பேபி ஜான்' படத்திற்கு நடிகர் விஜய் வாழ்த்து

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாளை 'பேபி ஜான்' திரைப்படம் வெளியாகவுள்ளது.

Update: 2024-12-24 14:15 GMT

சென்னை,

கடந்த 2016ம் ஆண்டு விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான திரைப்படம் 'தெறி'. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் இந்தியில் தற்போது உருவாகியுள்ளது. இப்படத்திற்கு 'பேபி ஜான்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இயக்குனர் அட்லியின் மனைவி பிரியாவின் ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

அட்லியின் உதவி இயக்குனர்களில் ஒருவரான காலிஸ் என்பவர் இயக்கி வரும் இந்த படத்தில் விஜய் நடித்த வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்கிறார். இந்த படத்தின் நாயகிகளாக கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி ஆகியோர் நடித்து வருகின்றனர். மைக்கேல் படத்தின் ஒளிப்பதிவாளர் கிரண் கவுஷிக் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். இசையமைப்பாளர் தமன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் பேபி ஜான் படக்குழுவினரை வாழ்த்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது, நாளை வெளியாகும் பேபி ஜான் படக்குழுவினர் அனைவரும் வாழ்த்துகள், மேலும் படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற வாழ்த்துகள். என்று தெரித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்