பி.வி.சிந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி - குடும்பத்துடன் சென்று வாழ்த்திய அஜித்

பி.வி.சிந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஐதராபாத்தில் நேற்று நடந்தது

Update: 2024-12-25 02:16 GMT

ஐதராபாத்,

இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்று 2 முறை பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து. இவருக்கும் தெலுங்கானாவின் ஐதராபாத் நகரை சேர்ந்த வெங்கட தத்தா சாய் என்பவருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

இதில் இரு குடும்பத்தினரும் சில முக்கிய விருந்தினர்களும் மட்டுமே கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து, பி.வி. சிந்துவின் திருமண வரவேற்பு (நேற்று) டிசம்பர் 24-ம் தேதி ஐதராபாத்தில் நடைபெற உள்ளதாக அவரது குடும்பத்தினர் சமீபத்தில் தெரிவித்தனர்.

அதன்படி, இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஐதராபாத்தில் நேற்று நடந்தது. இதில், நடிகர் அஜித்குமார் தனது குடும்பத்தினருடன் நேரில் சென்று புதுமண ஜோடியை வாழ்த்தினார். இது தொடர்பான புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்