'புஷ்பா 2 தி ரூல்' படத்தின் டிரெய்லர் வெளியாகும் தேதி அறிவிப்பு

'ஊ சொல்றியா' என்ற பாடலுக்கு சமந்தா நடனமாடி இருந்தநிலையில், புஷ்பா -2 படத்தில் நடிகை ஸ்ரீலீலா நடனமாடியுள்ளார்.;

Update: 2024-11-11 11:01 GMT

சென்னை,

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்துவரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த படம் 'புஷ்பா தி ரைஸ்'. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக 'புஷ்பா 2 தி ரூல்' படம் உருவாகி வருகிறது.

'புஷ்பா 2 தி ரூல்' படத்தின் டீசரும் அதனைத் தொடர்ந்து படத்தின் பாடல்களின் லிரிக் வீடியோவும் வெளியாகி வைரலாகின. 'புஷ்பா' படத்தில் 'ஊ சொல்றியா' என்ற பாடலுக்கு சமந்தா நடனமாடி இருந்தநிலையில், புஷ்பா -2 படத்தில் நடனமாட நடிகை ஸ்ரீலீலா ஒப்பந்தமாகி இருக்கிறார்.

அவர் நடமாடுன் அந்த பாடலுக்கு 'கிஸ்சிக்' என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் அடுத்த மாதம் 5ம் தேதி உலகளவில் வெளியாகவுள்ளநிலையில், டிரெய்லர் வெளியாகும் தேதியை படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அதன்படி, டிரெய்லர் வரும் 17ம் தேதி மாலை 6.03 மணிக்கு வெளியாகும் என்றும் இதன் வெளியீட்டு விழா பாட்னாவில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்