இளையராஜாவை மனைவியுடன் சந்தித்து ஆசிபெற்றார் நடிகர் பிரேம்ஜி

பிரேம்ஜி தனது மனைவியுடன் இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் பெற்ற புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Update: 2024-06-13 11:22 GMT

சென்னை,

தமிழ் சினிமாவின் இசைஞானி இளையராஜாவின் சகோதரரும், இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட கங்கை அமரனுக்கு வெங்கட் பிரபு, பிரேம்ஜி என இரு மகன்கள் உள்ளனர். நடிகர், இசையமைப்பாளர், பாடகர் எனப் பன்முகம் கொண்டவர் பிரேம்ஜி . இவர் 'சென்னை 600028 - 1 மற்றும் 2, கோவா, சரோஜா, சந்தோஷ் சுப்ரமணியம், மங்காத்தா, மாநாடு' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் பிரேம்ஜிக்கு எளிமையான முறையில் திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றுள்ளது. அதில், இரு வீட்டாரின் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மேலும், நடிகர் ஜெய், வைபவ், பாடகர் கிருஷ் போன்றோர் கலந்து கொண்டனர்.


பிரேம்ஜியின் திருமணத்தில் இசைஞானி இளையராஜா கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் பிரேம்ஜி தனது மனைவியுடன் இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் வாங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் பிரேம்ஜி தனது மனைவியுடன் இணைந்து இளையராஜாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்