சென்னை: கூட்டத்தில் சிக்கி தவித்த மமிதா பைஜு - அத்துமீறிய ரசிகர்கள்- வீடியோ வைரல்
சென்னை அண்ணாநகரில் நடந்த ஒரு கடை திறப்பு நிகழ்ச்சிக்கு மமிதா பைஜு வந்தார்.;
சென்னை,
மலையாளத்தில் வெளியாகி ரூ.100 கோடிக்கு மேல் வசூல் குவித்த 'பிரேமலு' படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை கொத்தாக அள்ளிய இளம் கதாநாயகி மமிதா பைஜுவுக்கு பட வாய்ப்புகள் குவிகின்றன.
தமிழில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக 'ரெபல்' படத்திலும் நடித்தார். தற்போது விஷ்ணு விஷால் ஜோடியாக புதிய படத்தில் நடித்து வருகிறார். தென் இந்திய திரையுலகில் அதிக படங்களில் நடித்து மளமளவென முன்னேறி வருகிறார்.
இந்த நிலையில் சென்னை அண்ணாநகரில் நடந்த ஒரு கடை திறப்பு நிகழ்ச்சிக்கு மமிதா பைஜுவை அழைத்து வந்தனர். அவரை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டு நின்றனர்.
மமிதா காரில் வந்து இறங்கியதும் கூட்டத்தில் சிக்கினார். அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு செல்பி எடுக்கவும், கைகுலுக்கவும் முயன்றனர். அப்போது சிலர் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மமிதா பைஜுவின் உடம்பில் கண்ட இடங்களில் தொட்டு அத்துமீறினர்.
அவர்கள் பிடியில் சிக்கி மமிதா பைஜு தவித்தார். உடனடியாக அதிக பாதுகாவலர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மமிதா பைஜுவை பத்திரமாக பாதுகாப்போடு அழைத்துச் சென்றனர். இது குறித்தான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.