'மெய்யழகன்' படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி

'மெய்யழகன்' படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்று வருகிறது.;

Update: 2024-09-14 13:34 GMT

சென்னை,

நடிகர் கார்த்தியின் 27-வது படத்தை விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான '96' படத்தை இயக்கிய பிரேம் குமார் இயக்குகிறார். இந்த படத்துக்கு 'மெய்யழகன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அரவிந்த்சாமி, கார்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். மகேந்திரன் ஜெயராஜூ ஒளிப்பதிவு செய்துள்ளார். கோவிந்தராஜ் படத்தொகுப்பு செய்கிறார்.

மெய்யழகன் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் 31ம் தேதி கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா வளாகத்தில் மிக பிரம்மாண்ட முறையில் நடைபெற்றது. இப்படம் வரும் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளநிலையில், படக்குழு புரொமோசன் பணிகளில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, தற்போது மெய்யழகன் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில், நடிகை ஸ்ரீதிவ்யா, நடிகர் அரவிந்த்சாமி, கார்த்தி உள்ளிட்ட படக்குழுவை சேர்ந்த பலர் கலந்துகொண்டுள்ளனர்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்