பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் பிரேமலு பட நடிகை
பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.;
சென்னை,
தமிழ் சினிமாவில் 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதன்பிறகு, 'லவ் டுடே' படத்தை இயக்கி நடித்தார். இந்த இரு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன.
இதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் 'எல்ஐசி' படத்திலும், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவியாளராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்க உள்ளார்.
இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் 9-ந்தேதி மலையாளத்தில் கிரிஷ் இயக்கத்தில் விஷ்ணு விஜய் இசையில் வெளியான திரைப்படம் 'பிரேமலு'. இந்த படத்தில் மமிதா பைஜூ, நஸ்லேன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
பாவனா ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ரூ.3 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.