திரிஷா இல்லை...'மட்ட' பாடலுக்கு நடனமாட வெங்கட் பிரபு முதலில் அணுகியது இவரைதான்?
மட்ட பாடலில் திரிஷாவின் நடனம் மற்றும் தோற்றம் ரசிகர்களால் மிகவும் ரசிகப்பட்டது.;
சென்னை,
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 5-ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டுவரும் படம் 'தி கோட்'. இப்படத்தில் விஜய்யுடன், பிரபு தேவா, பிரசாந்த், மோகன், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இப்படத்தில் விஜய் அப்பா மற்றும் மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். இதில் மகன் கதாபாத்திரத்தில் வரும் விஜய்யின் வயதை குறைத்து காட்டுவதற்காக டீஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், திரிஷா இப்படத்தில் வரும் 'மட்ட' பாடலுக்கு நடனமாடியிருந்தார்.
இதில், அவரது நடனம் மற்றும் தோற்றம் ரசிகர்களால் மிகவும் ரசிகப்பட்டது. இந்நிலையில், திரிஷாவுக்கு முன் மட்ட பாடலில் நடனமாட இயக்குனர் வெங்கட் பிரபு நடிகை ஸ்ரீலீலாவை அணுகியதாக தகவல் வெளியாகியுள்ளது.
'குண்டூர் காரம்' படத்தில் 'குச்சி மடத்தபெட்டி' பாடலில் ஸ்ரீலீலாவின் நடனத்தை பார்த்து வெங்கட் பிரபு அவரை அணுகியதாக கூறப்படுகிறது. ஆனால் ஸ்ரீலீலா, படத்தின் ஒரு பாடலில் மட்டும் தோன்ற விரும்பாததால் அதை நிராகரித்ததாக தெரிகிறது.