'கல்கி 2898 ஏடி' தயாரிப்பாளர்களின் புதிய படம்
இப்படத்திற்கு 'சாம்பியன்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
தெலுங்கு சினிமாவில் பழமையான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று வைஜெயந்தி மூவிஸ். இந்த நிறுவனம் சமீபத்திய ஆண்டுகளில் மகாநதி, சீதா ராமம், ஜாதி ரத்னலு மற்றும் கல்கி 2898 ஏடி போன்ற சூப்பர் ஹிட்களை வழங்கியுள்ளது. இவ்வாறு ஹிட் படங்களை கொடுத்து வரும் வைஜெயந்தி மூவிஸ் தற்போது புதிய படம் ஒன்றை தொடங்கியுள்ளது.
அதில் ஸ்ரீகாந்தின் மகன் ரோஷன் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை 'சேவ் தி டைகர்ஸ்' என்ற தொடரை எழுதிய பிரதீப் அத்வைதம் இயக்குகிறார். சாம்பியன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படம் விளையாட்டு சார்ந்த கதைக்களத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
குறிப்பிடத்தக்க பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை ஸ்வப்னா சினிமாவுடன் இணைந்து கான்செப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஆனந்தி ஆர்ட் கிரியேஷன்ஸ் தயாரிக்கின்றன. நேற்று இப்படத்தின் படப்பிடிப்பை நாக் அஸ்வின் தொடங்கி வைத்தார். அடுத்த ஆண்டு 'சாம்பியன்' படம் வெளியாகும் என்று தெரிகிறது.