செம்பருத்தி டீ - சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா

செம்பருத்தி டீ குடித்தால் நல்லது என இன்ஸ்டாவில் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளார் நயன்தாரா.

Update: 2024-07-29 10:53 GMT

சென்னை,

சமீபத்தில் நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்தான் தொடர்ச்சியாக செம்பருத்தி டீ குடித்து வருவதாகவும் தனது ரசிகர்களையும் செம்பருத்தி டீ குடிப்பதை பரிந்துரைத்திருந்தார். சர்க்கரை நோய் , உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு செம்பருத்தி டீ நல்லது என்றும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது என்று நயன்தாரா தெரிவித்திருந்தார். இந்த டிப்ஸை தனக்கு தனது ஊட்டச் சத்து நிபுணரான முன்முன் கனேரிவால் பரிந்துரைத்ததாக அவரை பாராட்டியிருந்தார். நயன்தாராவின் இந்த பதிவை விமர்சித்து டாக்டர் பிலிப்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில் "செம்பருத்தி டீ குடிப்பதற்கு ருசியானது என்பதோடு நயன்தாரா நிறுத்தியிருந்தால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அதோடு நிற்காமல் செம்பருத்தி டீயின் மருத்துவ குணத்தைப் பற்றி பேசி தனது அறிவின்மையை வெளிப்படுத்தி இருக்கிறார். செம்பருத்தியின் மருத்துவ குணங்கள் என்று நயன்தாரா குறிப்பிட்டவை எதுவுமே நிரூபிக்கப்படாத உண்மைகளே. இந்த பதிவு அவரது ஊட்டச்சத்து நிபுணரை ப்ரோமோட் செய்யும் நோக்கத்திற்காகவே அவர் இந்த பதிவை பதிவிட்டுள்ளார். செம்பருத்தி டீயை தினமும் குடிப்பதால் ஆண் மற்றும் பெண்களுக்கு நிறைய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. நடிகை நயன்தாரா ஆயுர்வேத மருத்துவ முறையே வாழ்க்கையை வழிநடத்திச் செல்லும் என்கிற புரிதலில் பல்வேறு போலியான தகவல்களை பகிர்ந்துள்ளார்" என்று அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவைத் தொடர்ந்து நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனது பதிவை நீக்கியுள்ளார்.

மேலும் டாக்டர் பிலிப்ஸ்  கூறுகையில் பதிவு நீக்கப்பட்டு உள்ளது மன்னிப்பு கேட்கவில்ல. பிரபலங்களின் இத்தகைய நடத்தையை தடுக்க சட்டங்கள் தேவை என பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்