இந்த ஆண்டு வெளியாக உள்ள நயன்தாரா படங்கள்

டாப் நடிகர்கள் படத்தில் நடித்து முன்னணி கதாநாயகியாக நயன்தாரா உயர்ந்துள்ளார்.;

Update: 2025-01-01 02:25 GMT

சென்னை,

மலையாளத்தில் தனது திரைப்பயணத்தை தொடங்கிய நயன்தாரா, தமிழில் சரத்குமார் ஜோடியாக 'ஐயா' படத்தில் அறிமுகமானார். அதன்பின்னர், ரஜினிகாந்துக்கு ஜோடியாகி சந்திரமுகி படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி பலரது புருவத்தை உயர வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, ஜெயராம், மம்முட்டி, சூர்யா, விஜய் உள்ளிட்ட டாப் நடிகர்கள் படத்தில் நடித்து முன்னணி கதாநாயகியாக நயன்தாரா உயர்ந்தார். இன்று புத்தாண்டுபிறந்துள்ளநிலையில், இந்த ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியாக உள்ள படங்களை தற்போது காண்போம்.

ராக்காயி

இப்படத்தை செந்தில் நல்லசாமி இயக்க கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகும் இப்படத்தை டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன் மற்றும் மூவிவெர்ஸ் இந்தியா தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

டாக்சிக்

நடிகர் யாஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை நடிகையும் இயக்குனருமான கீது மோகன் தாஸ் இயக்குகிறார். இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 10ம் தேதி திரைக்கு வருகிறது..

மண்ணாங்கட்டி

நயந்தாரா நடிக்கும் இப்படத்தை 'ப்ளாக் ஷீப்' யூடியூப் சேனல் புகழ் ட்யூட் விக்கி இயக்குகிறார். இப்படத்தில் நயன்தாரா தவிர, யோகி பாபு, தேவதர்ஷினி, கவுரி கிஷன், நரேந்திர பிரசாத் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டெஸ்ட்

'தமிழ் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, ஜகமே தந்திரம், மண்டேலா' உள்ளிட்ட படங்களை தயாரித்த சசிகாந்த் தற்போது இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். இந்த படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு 'டெஸ்ட்' என்று பெயரிடப்பட்டுள்ளது. 'வொய் நாட் ஸ்டுடியோஸ்' நிறுவனத்தின் மூலம் சசிகாந்த இந்த படத்தை தயாரிக்கிறார். மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

'டியர் ஸ்டூடண்ட்ஸ்'

பிரபல மலையாள நடிகரான நிவின் பாலி நடிக்கும் 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' படத்தில் நயன்தாரா இணைந்துள்ளார். இந்த படத்தை ஜார்ஜ் பிலிப்ஸ் ராய் மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் இயக்குகின்றனர். இந்த படத்தில் நயன்தாரா ஆசிரியராக நடிப்பதாக கூறப்படுகிறது. படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு 'லவ் ஆக்சன் டிராமா' என்ற திரைப்படத்தில் நிவின் பாலியுடன் இணைந்து நயன்தாரா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்