வீடியோ கால் மூலம் நடந்த நெப்போலியன் மகன் தனுஷின் நிச்சயதார்த்தம்

நெப்போலியனும், அவரது மனைவியும், பெண்வீட்டிற்கு வந்து நிச்சயதார்த்தத்தை வீடியோ கால் மூலம் சிறப்பாக செய்து முடித்துள்ளதாக கூறப்படுகிறது.;

Update:2024-07-12 20:45 IST

சென்னை,

1991ல் பாரதிராஜா இயக்கத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் நெப்போலியன். அதன் பின் தனது நடிப்பின் திறமையால் 1993-ல் ஹீரோவானார். கிட்டத்தட்ட 100 படங்களுக்கும் மேல் நடித்து வந்தவர் திடீரென்று நடிப்பிற்கு முழுக்குப்போட்டார். தமிழில் சுல்தான் திரைப்படத்திற்கு பிறகு இவர் நடிக்கவில்லை.

திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் போதே இவரின் பார்வை அரசியலின் பக்கம் சென்றது. தி.மு.க.வில் இணைந்து தேர்தலில் நின்று வெற்றிப்பெற்று எம்பியாக ஜொலித்தார். ஆனால்... திடீரென்று, தனது குடும்ப நலனுக்காக, அனைத்தையும் ஒதுக்கி விட்டு அமெரிக்கா சென்று செட்டிலாகி விட்டார். அங்கு ஜீவன் டெக்னாலஜீஸ் என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை ஆரம்பித்தார்.

இவருக்கு ஜெயசுதா என்ற மனைவியும், குணால், தனுஷ் என்ற இரு மகன்கள் உண்டு. இதில் தனுஷுக்கு நான்கு வயதாகும் போது தசை சிதைவு நோய் தாக்கியுள்ளது. தனுஷை குணப்படுத்த பல்வேறு சிகிச்சைகளை அவர் மேற்கொண்டுவந்தார். இதில் தனுஷ் ஓரளவு குணமாகவே, ஒரு தந்தையாக, தனது மகனின் வருங்காலத்தை நினைவில் கொண்டு அவருக்கு திருமணம் செய்து வைக்க தீவிரமாக முயற்சி செய்து வந்துள்ளார்.

இவரது முயற்சி வீண் போகவில்லை... திருநெல்வேலியை அடுத்து மூலக்கரைப்பட்டியைச் சார்ந்தவர் விவேகானந்தர் என்பவரின் மகளுக்கும், தனுஷுக்கும் கூடிய விரைவில் திருமணம் நடைபெற உள்ளது என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.

முன்னதாக இவர்களது நிச்சயதார்த்தம் வீடியோ காலில் நடந்ததாக தெரிகிறது. காரணம் தனுஷால் நீண்ட நேரம் பயணம் செய்ய இயலாததால், அவர் அமெரிக்காவில் இருக்க, நெப்போலியனும், அவரது மனைவியும், பெண்வீட்டிற்கு வந்து நிச்சயதார்த்தத்தை வீடியோ கால் மூலம் சிறப்பாக செய்து முடித்துள்ளதாக கூறப்படுகிறது.

தனுஷ் தனது நிச்சயதார்த்தத்தை இன்ஸ்டாகிராமில் இதை உறுதி செய்துள்ளார். பல்வேறு திரை துறையினரும், அரசியல்வாதிகளும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்