காதலரை கரம் பிடித்த தனுஷ் பட நடிகை

சென்னையில் மேகா ஆகாஷுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.;

Update:2024-09-15 20:21 IST

image courtecy:instagram@meghaakash

சென்னை,

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் மேகா ஆகாஷ். அதனைத்தொடர்ந்து, தனுஷுடன் என்னை நோக்கி பாயும் தோட்டா, சிம்புவுக்கு ஜோடியாக வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் நடித்து பிரபலமானார்.

பின்னர் தெலுங்கில், டியர் மேகா, ராஜ ராஜ சோரா, பிரேமதேசா, ராவனசுரா போன்ற திரைப்படங்களில் நடித்தார். கடைசியாக இவரது நடிப்பில், சபாநாயகன், வடக்குப்பட்டி ராமசாமி, மழை பிடிக்காத மனிதன் உள்ளிட்ட படங்கள் வெளியாகின.

இந்த சூழலில், மேகா ஆகாஷுக்கு கடந்த மாதம் 22-ம் தேதி இவரது காதலரும் நடிகருமான சாய் விஷ்ணு என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று சென்னையில் இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இது குறித்தான புகைப்படங்களை நடிகை மேகா ஆகாஷ் பகிர்ந்து நெகிழ்ச்சி பதிவை பகிர்ந்திருக்கிறார். அதனைத்தொடர்ந்து, காதலரை கரம் பிடித்த மேகா ஆகாஷுக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்