'சிக்கந்தர்' - காஜல் அகர்வாலின் கதாபாத்திரம் இதுவா?
இப்படத்தில் காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.;

சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் தீனா, ரமணா, ரஜினி, கத்தி, துப்பாக்கி என பல வெற்றி படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் தற்போது பாலிவுட்டில் சல்மான்கானை வைத்து 'சிக்கந்தர்' படத்தை இயக்கி இருக்கிறார்.
ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வருகிற 30-ந் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு உலக அளவில் 'சிக்கந்தர்' படம் வெளியாக உள்ளது. நேற்று இப்படத்தின் டிரெய்லர் வெளியானது. அதில் காஜல் அக்ர்வாலின் கதாபாத்திரம் காட்டப்பட்டிருந்தது. இதுமட்டுமில்லாமல், இப்படத்தின் 2-வது பாடல் 'பம் பம் போலே' விலும் காஜல் இடம்பெற்றிருந்தார். இதன் மூலம் அவரது பாத்திரம் படத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.