ஐஸ்வர்யா லட்சுமியின் 'சம்பராலா எடிகட்டு' படத்தில் இணைந்த வாரிசு நடிகர்
விஜய்யின் வாரிசு படத்தில் நடித்திருந்த ஸ்ரீகாந்த் இப்படத்தில் இணைந்திருக்கிறார்.;

சென்னை,
சாய் துர்கா தேஜ் தற்போது 'சம்பராலா எடிகட்டு' என்ற பீரியட் ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே சாய் துர்கா தேஜ்ன் தோற்றமும், படத்தின் கதாநாயகி ஐஸ்வர்யா லட்சுமியின் தோற்றமும் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், விஜய்யின் வாரிசு படத்தில் நடித்திருந்த ஸ்ரீகாந்த் இப்படத்தில் இணைந்திருக்கிறார். நேற்று ஸ்ரீகாந்தின் பிறந்தநாளையொட்டி, அவரது கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தி உள்ளனர். அதன்படி, ஸ்ரீகாந்த் இப்படத்தில் "பிரிட்டிஷு" என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ரோஹித் கேபி இயக்கும் இப்படத்தை, கே நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி ஆகியோர் தயாரிக்கின்றனர். தற்போது இப்படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் செப்டம்பர் 25ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.