'கல்கி 2898 ஏடி' வெற்றிக்குப் பிறகும் பிரபாஸ் கொஞ்சம் கூட மாறவில்லை - மாளவிகா மோகனன்

பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் 'தி ராஜா சாப்' படத்தின் மூலம் மாளவிகா மோகனன் தெலுங்கில் அறிமுகமாகி இருக்கிறார்.;

Update:2024-08-26 11:13 IST

சென்னை,

மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், தமிழில் 'பேட்ட', 'மாஸ்டர்' 'மாறன்' போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாகி வெற்றிநடை போட்டுவரும் தங்கலான் படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிக்காட்டி இருந்தார் மாளவிகா மோகனன். இவ்வாறு தமிழ், மலையாள படங்களில் நடித்து வந்த மாளவிகா மோகனன் தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் 'தி ராஜா சாப்' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகி இருக்கிறார்.

பிரபாஸ் 'கல்கி 2898 ஏடி' படத்தின் வெற்றியைத்தொடர்ந்து, இப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், பிரபாஸுடன் பணிபுரியும் அனுபவத்தைப் மாளவிகா மோகனன் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில்,

''கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஆவதற்கு முன்பே பிரபாஸுடன் படப்பிடிப்பை ஆரம்பித்தேன். மிகப்பெரிய வெற்றி படத்தை பிரபாஸ் கொடுத்திருந்தாலும், அவர் கொஞ்சம் கூட மாறவில்லை. அதே அடக்கமான மற்றும் சாதாரண நபராகவே நடந்து கொள்கிறார். 'தி ராஜா சாப்' படப்பிடிப்பில் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் பிரபாஸ் இருக்கிறார். ஒட்டுமொத்த குழுவும் எனக்கு உறுதுணையாக இருக்கிறது. இப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் நான் பிரகாசிப்பேன் என்று நம்புகிறேன்', என்றார்.

இப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாக உள்ளது. மேலும், யுத்ரா, சர்தார் 2 உள்ளிட்ட படங்களிலும் மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். இதில் யுத்ரா படம் அடுத்த மாதம் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்