வைரமுத்துவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கமல்

நடிகர் கமல், வைரமுத்துவுக்கு பிறந்தநாள் வாழ்த்தை தனது எக்ஸ் தளப்பக்கம் மூலம் தெரிவித்துள்ளார்.

Update: 2024-07-13 11:08 GMT

சென்னை,

1980-ம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பின்னர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கன்னத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை பெற்றார்.

தமிழ் திரையுலகில் மட்டும் இல்லாமல் தமிழ் இலக்கியம், பண்பாடு ஆகிய தளங்களில் மிகவும் முக்கியமான ஆளுமையாக விளங்கி வருபவர் கவிப்பேரரசு என அழைக்கப்படும் வைரமுத்து. கவிஞர் வைரமுத்து இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு அவரது ரசிகர்கள் திரைப்பிரபலங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் " இன்று பிறந்தநாள் கொண்டாடும் மனதிற்கினிய நண்பர், கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பல்லாண்டு வாழ மனதார வாழ்த்தி மகிழ்கிறேன்" என்று கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்